Tiger: காயமடைந்த புலி குட்டியை மீட்டு சிகிச்சையளிக்கும் தமிழக வனத்துறை
வால்பாறை பகுதியில் பலவீனமான புலிக் குட்டியை கண்ட வன ஊழியர்கள் அதனை கண்காணித்து வந்தனர். கனமழை மற்றும் மோசமான புலப்பாடு காரணமாக குட்டி தனது குடும்பத்தை விட்டு பிரிந்திருக்கலாம் என வனத்துறையினர் அனுமானிக்கின்றனர்.
மிகவும் பலவீனமாக இருந்த புலிக்குட்டிக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
தேயிலை தோட்ட வளாகத்தில் உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தில் புலிக்குட்டி தஞ்சம் புகுந்திருந்தது.
திருநெல்வேலியைச் சேர்ந்த கால்நடை மருத்துவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பஞ்சாயத்து தலைவர் ஆகியோர் இணைந்த குழுவினர், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி புலிக் குட்டி பிடிக்கப்பட்டது.
தமிழ்நாடு தலைமை வனவிலங்கு வார்டன் டாக்டர்.சேகர் குமார் நிராஜ் வழிகாட்டுதலின் கீழ் அறுவை சிகிச்சை நடைபெற்றது. சிகிச்சை பெற்று வரும் புலிக்குட்டியின் உடல்நிலை தற்போது மேம்பட்டு வருகிறது.