TN Election Results 2024: தமிழகத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற டாப் 5 வேட்பாளர்கள்!

Wed, 05 Jun 2024-10:51 am,

நாடாளுமன்ற தேர்தல் 2024

இந்த வருடத்தில் நடைப்பெற்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் ஒட்டுமொத்த இந்தியாவே உற்று நோக்கி பார்க்கும் வகையில் இருந்தது. காரணம், இது இந்தியா கூட்டணி vs ஆளும் பாஜக அரசுக்கு இடையேயான தேர்தலாக மட்டுமன்றி, ஜனநாயகம் vs அடக்குமுறைக்கு எதிரான தேர்தலாக பார்க்கப்பட்டது. 

தமிழகத்தில், பாஜக பிற கட்சிகளின் கூட்டணியுடன் சேர்த்து மொத்தம் 12 தொகுதிகளில் நின்றது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தனது கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும் என கூறிய நிலையில், அது தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு தவிடு பொடியானது. தமிழ் நாட்டில், பாஜகவிற்கு ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை. 

தமிழகத்தில் திமுக-இந்தியா கூட்டணி மொத்தம் 40 தொகுதிகளில் நின்றது. புதுச்சேரி உள்பட, நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது, திமுக. இதையடுத்து மக்கள் பலர் “நாற்பதும் நமதே” என்று இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தென்னிந்தியாவில் பாஜக கட்சி நுழைய முடியாது என்று கூறி வந்தனர். ஆனால், கேரளா மற்றும் கர்நாடகாவில் பாஜக மக்களின் வாக்கை சம்பாதித்து இருக்கிறது. இதனால், "TN will remain independent kingdom" என மக்கள் கூறி வருகின்றனர். 

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசிகாந்த் செந்தில், திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்டார். இவருக்கு கிடைத்த மொத்த வாக்குகள் 7,96,956-வித்தியாசம் -5,72,155

சச்சிதானந்தம் சிபிஐ (எம்)

திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டார், சிபிஐஎம் கட்சியை சேர்ந்த சச்சிதானந்தம். இவர் 4,43,821 வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 6,70,149 ஆகும். 

டி.ஆர்.பாலு:

திமுக கட்சியை சேர்ந்த டி.ஆர்.பாலு ஸ்ரீபெரம்புதூர் தொகுதியில் நின்று 7,58,611 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் 4,42,009 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். 

கனிமொழி கருணாநிதி :

தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி மொத்தம் 5,40,729 வாக்குகளை பெற்றிருந்தார். இவர், 3,92,738 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

அருண் நேரு:

பெரம்பலூர் தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட்டார் அருண் நேரு. இவர் பெற்ற மொத்த வாக்குகள்-6,03,209, வித்தியாசம் 3,89,107 வாக்குகள் ஆகும். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link