கூகுள் தேடல் ஆண்டு 2021: அதிகம் தேடப்பட்ட டாப் 10 உணவுகள்
1. யுனோகி காளான்: யுனோகி காளான் உண்மையில் ஜப்பானிய காளான் ஆகும், இது ஜப்பானிய உணவு வகைகளில் பயன்படுத்த பிரபலமாக உள்ளது. இந்த ஆண்டு அதன் செய்முறை கிழக்கு இந்தியாவில் அதிகம் தேடப்பட்டது.
2. மோதக்: மோதக் ஒரு இனிப்பு வகையாகும், இது விநாயக சதுர்த்தி அன்று செய்யப்படுகிறது. விநாயகப் பெருமானுக்கு மோதகம் என்றால் மிகவும் பிடிக்கும். 2021 ஆம் ஆண்டில், மக்கள் யூடியூப் மற்றும் கூகுளில் மோதக் செய்முறையை அதிகம் தேடினார்கள்.
3. மேத்தி மட்டர் மலாயி: 2021 ஆம் ஆண்டில், மக்கள் மேத்தி மாதர் மலாயையும் அதிகம் விரும்பினர். வெந்தயம், பட்டாணி மற்றும் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட இந்த செய்முறையை மக்கள் அதிகம் தேடினர்.
4. கீரை: பசலைக்கீரை ஆரோக்கியத்திற்கு நல்லது. குறிப்பாக வட இந்திய மக்கள் பாலக் பன்னீர் முதல் ஆலு பாலக் வரையிலான ரெசிபிகளை முயற்சி செய்து பார்த்தனர்.
5. சிக்கன் சூப்: இது நோய் எதிர்ப்பு சக்தி பூஸ்டர் என்றும் அழைக்கப்படுகிறது. வெளியில் இருந்து சிக்கன் சூப்பை ஆர்டர் செய்வதற்குப் பதிலாக, அதை வீட்டிலேயே தயாரிக்க மக்கள் கடுமையாக முயற்சித்தனர்.
6. பார்ன் ஸ்டார் மார்ட்டினி: இது ஒரு இந்திய காக்டெய்ல் ஆகும். பார்ன் ஸ்டார் மார்ட்டினி என்பது வென்னிலா சுவை கொண்ட வோட்கா, பாஸோ, பேஷன் பழச்சாறு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றால் ஆன ஒரு பேஷன் ஃபுரூட் சுவை கொண்ட காக்டெய்ல் பானம் ஆகும்.
7. லாசக்னா: இது ஒரு இத்தாலிய உணவு மற்றும் இது சில காலமாக இந்தியாவில் மிகவும் விரும்பப்படுகிறது. இந்த லாசக்னா இறைச்சி சாஸ் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. சாஸ் லேயரில் நூடுல்ஸ் மற்றும் சீஸ் பயன்படுத்தி செய்யும் போது, இதன் சுவை அட்டகாசமாக இருக்கும்.
8. குக்கீஸ்: இந்த குக்கீஸ் செய்முறை பற்றி அதிகம் தேடப்பட்டதற்கு காரணம் லாக்டவுன் காலத்தில் வீட்டில் இருக்கும் போது குழந்தைகளுக்கு செய்து கொடுப்பதற்காக இருக்கலாம்.
9. மட்டர் பனீர்: மட்டர் பனீர் பிடிக்காதவர்கள் வெகு சிலரே இருப்பார்கள். 2021 ஆம் ஆண்டில், மக்கள் இந்த ரெசிபியை அதிகம் தேடினர்.
10. கசாயம்: கொரோனா வந்த பின்னர் மக்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனத்தை செலுத்தி ஆரம்பித்துள்ளதால், 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் மக்கள் பலரும் கசாயத்தை எப்படி செய்வதென்று கூகுளில் தேடியுள்ளனர்.