இந்தியாவில் ரூ.70,000க்குள் கிடைக்கும் சிறந்த 5 ஸ்கூட்டர்கள்!
ஹோண்டா ஆக்டிவா இந்தியாவில் தனக்கென ஒரு பெயரை உருவாக்கி, தற்போது ஆக்டிவா 6ஜி என்ற பெயரில் அதன் ஆறாவது தலைமுறையை சந்தையில் களமிறங்கியுள்ளது. லேட்டஸ்டான வடிவமைப்புடன் மற்றும் மேம்படுத்தப்பட்ட பல்வேறு அம்சங்களுடன் இது கிடைக்க பெறுகிறது. இது 109சிசி ஒற்றை சிலிண்டர் எஞ்சினிலிருந்து சக்தியைப் பெறுகிறது. இதன் விலை ரூ.63,912 முதல் தொடங்குகிறது.
ஹோண்டா டியோ என்பது V-வடிவ ஹெட்லைட்டுடன் கூடிய நவீன வடிவமைப்பைக் கொண்ட ஸ்கூட்டர் ஆகும். இதில் 109.19 சிசி இன்ஜின் உள்ளது, இதில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எல்இடி ஹெட்லேம்ப் போன்ற பல அம்சங்கள் உள்ளது. இதன் விலை ரூ.52,241 முதல் தொடங்குகிறது.
டிவிஎஸ் ஜூபிடர் மிகவும் பிரபலமான 110சிசி ஸ்கூட்டர்களில் ஒன்றாகும். இது ஒரு உறுதியான மெட்டல் பாடி மற்றும் டியூப்லெஸ் டயர்கள் மற்ற அம்சங்களுடன் இணைந்துள்ளது. இது ஒரு லிட்டர் எரிபொருளுக்கு 62 கி.மீ. மைலேஜ் கொடுக்கிறது. இதன் விலை ரூ.55,349 முதல் தொடங்குகிறது.
சுசுகி ஆக்ஸஸ் 125 அதன் மென்மையான வடிவமைப்பு மற்றும் பல அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் 160மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 125 சிசி எஞ்சின் சக்தியைக் கொடுக்கும். இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.59,014 முதல் தொடங்குகிறது.
டிவிஎஸ் என்டிஓஆர்கியூ 125 இந்தியாவில் உள்ள மிகவும் சிறப்பம்சங்கள் நிறைந்த ஸ்கூட்டர்களில் ஒன்றாகும். இதில் டியூப்லெஸ் டயர்கள், டாப் ஸ்பீட் ரெக்கார்டர் மற்றும் அலாய் வீல்கள் போன்ற பல அம்சங்கள் உள்ளன. இது 124.79சிசி சிலிண்டர் ஏர்-கூல்டு எஸ்பிஹெச்சி இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இதன் விலை ரூ.59,462 முதல் தொடங்குகிறது.