தற்காப்புக் கலைகளில் சிறந்து விளங்கும் இந்திய வம்சாவளி வீரர்களின் பட்டியல்

Sun, 07 Aug 2022-10:34 am,

பரத் காந்தரே அல்டிமேட் ஃபைட்டிங் சாம்பியன்ஷிப்பில்இடம்பெற்ற முதல் இந்திய எம்எம்ஏ ஃபைட்டர் ஆவார். அவர் சூப்பர் ஃபைட் லீக்கில் தனது முத்திரையைப் பதித்தார். 2017 இல் அறிமுகமான பரத் காந்தரே, மிக்ஸ்டு தற்காப்பு கலை அகாடமியை நிறுவினார்.

இந்திய வம்சாவளி மல்யுத்த வீரர் 2010 மற்றும் 2012 இல் கனடாவிற்காக காமன்வெல்த் தங்கப் பதக்கத்தை வென்றவர் அர்ஜுன் சிங் புல்லர்,  UFC 215 இல் லூயிஸ் என்ரிகு பார்போசா டி ஒலிவேராவுக்கு எதிராக அறிமுகமானார். உலக பட்டத்தை வென்ற முதல் இந்திய வம்சாவளி வீரர் ஆனார் அர்ஜுன் சிங் புல்லர்.

(புகைப்படம்: ட்விட்டர்)

பிரபல போகாட் குடும்பத்தைச் சேர்ந்த ரிட்டி, 2016ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் 48 கிலோ பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். அவரது MMA வாழ்க்கையில், கலந்துக் கொண்ட ஒன்பது போட்டிகளில் ஏழில் வென்றுள்ளார்.

காம்பாட் ஃபெடரேஷனில் பங்கேற்கும் ஃபர்ஹாத் பிரேவ், தற்போது, ​​8-2 என்ற வெற்றி சாதனையைப் பெற்றுள்ளார்.  

(புகைப்படம்: ட்விட்டர்)

கனடாவைச் சேர்ந்த குர்தர்ஷன் (கேரி) சிங் மங்காட், சர்வதேச MMA நிகழ்வில் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் MMA ஃபைட்டர் ஆனார்.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link