இந்தியாவின் பணக்கார மாநிலங்களின் பட்டியல்! தமிழ்நாட்டிற்கு எந்த இடம் தெரியுமா?

Fri, 16 Feb 2024-4:42 pm,

மொத்த உள்நாட்டு உற்பத்தி: ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பை அளவிடுவதற்கான அளவுரு ஆகும். தனிநபர் ஜிடிபி என்பது, மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது, நாட்டில் ஒரு நபரின் சராசரி பொருளாதார உற்பத்தியை அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியை குறிக்கும் அளவீடாகும். இது, ஒரு நாட்டின் மொத்த ஜிடிபியை அதன் மக்கள்தொகையால் வகுத்து மதிப்பிடப்படுகிறது. 

இந்த இரண்டு அளவுருக்களும் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் மக்கள் தொகை எவ்வளவு செல்வத்தை வைத்திருக்கிறது என்பதை அளவிடுகிறது. எனவே, இந்திய மாநிலங்களை, மொத்த உள்நாட்டு உற்பத்தியின்படி தரவரிசை பட்டியலிடுவது, நாட்டின் பணக்கார மற்றும் ஏழ்மையான மாநிலங்களைக் கண்டறிய ஒரு சிறந்த வழியாகும். அந்த வகையில் இந்தியாவின் பணக்கார மாநிலங்களின் பட்டியலைப் பார்க்கலாம். GSDP (Gross State Domestic Product) அடிப்படையில் நாட்டின் பணக்கார மாநிலங்களின் பட்டியல்...

மகாராஷ்டிரா மாநிலம் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து நாட்டின் பணக்கார மாநிலம் என்ற பெயரைப் பெறுகிறது. 38.79 2.24 லட்சம் கோடி ரூபாய் அளவில் ஜிடிபியுடன், 2023-24இல் இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பெறுகிறது

இரண்டாவது இடம் தமிழ்நாட்டிற்குக் கிடைத்துள்ளது. பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்து நாட்டின் இரண்டாவது பணக்கார மாநிலம் என்ற பெயரைப் பெறுகிறது. 28.3 2.73 லட்சம் கோடி ரூபாய் ஜிடிபியுடன், 2023-24இல் இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பெறுகிறது தமிழ்நாடு...

பட்டியலில் மூன்றாவது இடம் குஜராத் மாநிலத்திற்கு கிடைத்துள்ளது. பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பிடித்து நாட்டின் பணக்கார மாநிலங்களில் தமிழ்நாட்டிற்கு அடுத்த இடத்தைப் பெறுகிறது குஜராத். 25.62 2.41 லட்சம் கோடி ரூபாய் ஜிடிபியுடன், 2023-24இல் இந்தப் பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பெறுகிறது

பட்டியலில் நான்காவது இடம் கர்நாடகா மாநிலத்திற்கு கிடைத்துள்ளது. பட்டியலில் நான்காம் இடத்தைப் பிடித்து நாட்டின் பணக்கார மாநிலங்களில் நான்காம் இடத்தைப் பிடிக்கிறது கர்நாடகா. 25 3.01 லட்சம் கோடி ரூபாய் ஜிடிபியுடன், 2023-24இல் இந்தப் பட்டியலில் நான்காம் இடத்தைப் பெறுகிறது  

 

குஜராத் 

உத்தரப் பிரதேசம் பட்டியலில் ஐந்தாம் ஆறாஇடத்தைப் பிடித்துள்ளது உத்தரப்பிரதேச மாநிலம். 24.39 0.83 லட்சம் கோடி ரூபாய் ஜிடிபியுடன், 2023-24இல் இந்தப் பட்டியலில் ஐந்தாம் இடத்தைப் பெறுகிறது உத்தரப்பிரதேசம்

மேற்கு வங்காளம் பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. 17.19 1.41 லட்சம் கோடி ரூபாய் ஜிடிபியுடன், 2023-24இல் இந்தப் பட்டியலில் ஆறாவது இடத்தைப் பெறும் மாநிலம் மேற்கு வங்கம்

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link