வேட்டையன் விராட் கோலி... 2023இல் படைத்த டாப் சாதனைகள் இதோ!
விராட் கோலிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளை விட இந்தாண்டு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. உலகக் கோப்பையில் தொடர் நாயகன், இந்தாண்டில் அதிகபட்ச ரன்கள் எடுத்த பேட்டர் வரிசையில் 2ஆம் இடம் என பல விஷயங்களை அடுக்கலாம்.
அந்த வகையில், இந்தாண்டு இந்திய அணியின் ரன் மெஷினாக அறியப்படும் விராட் கோலி படைத்த டாப் சாதனைகளை இதில் காணலாம்.
13 ஆயிரம் ரன்கள்: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 13 ஆயிரம் ரன்களை வேகமாக எட்டிய வீரர் என்ற பெருமையை விராட் கோலி படைத்தார். விராட் கோலி இதனை 267 இன்னிங்ஸில் படைத்த நிலையில், இவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் சச்சின் டெண்டுல்கர் 321 இன்னிங்ஸில்தான் 13 ஆயிரம் ரன்களை கடந்தார்.
மொத்த பேட்டிகள்: விராட் கோலி இந்தாண்டன் சேர்த்து மொத்தம் 519 சர்வதேச போட்டிகளில் விளையாடிவிட்டார். தோனி 538 போட்டிகள், சச்சின் 664 போட்டிகள் என பட்டியலில் முன்னணியில் உள்ளனர்.
தொடர் நாயகன்: ஒருநாள் போட்டிகளுக்கான உலகக் கோப்பையில் 11 இன்னிங்ஸில் 765 ரன்களை கைப்பற்றி விராட் கோலி தொடர் நாயகன் விருதை பெற்றார். இதில் மூன்று சதங்கள், ஆறு அரைசதங்கள் அடக்கம், சராசரி 95.62 ஆகும்.
முதல் வீரர்: ஐபிஎல் வரலாற்றில் 7 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார், விராட் கோலி.
ஐம்பதாவது நூறு: ஒருநாள் அரங்கில் சச்சினின் சாதனையை முறியடித்து, விராட் கோலி அவரது 50ஆவது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார்.