ஹார்லி டேவிட்சனின் மலிவான பைக்குடன் ராயல் என்ஃபீல்டு புல்லட் போட்டி போட முடியுமா?
இது ஹார்லி டேவிட்சன் X350 இன் இறுதி தயாரிப்பு பதிப்பாகும். பைக் முந்தைய கசிந்த படங்களை ஒத்திருக்கிறது. ஸ்டைலிங் அடிப்படையில், புதிய மோட்டார்சைக்கிளில் எல்இடி ஹெட்லைட், செவ்வக எரிபொருள் டேங்க், ஸ்கூப் செய்யப்பட்ட சிங்கிள் பீஸ் சீட் மற்றும் க்ராஷ் கார்டு ஆகியவை அருமையாக உள்ளன.
குறைந்த நிலைப்பாடு கொண்ட நேக்கட் ஹார்லி மோட்டார்சைக்கிள் வசதியாக பயணிக்க உதவும். அண்டர்பெல்லி எக்ஸாஸ்ட், வட்ட வடிவ அரை-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பாட் ஆகியவற்றைப் கொண்டுள்ளது.
இது 36bhp ஆற்றலை உருவாக்கக்கூடிய 353சிசி, இரட்டை சிலிண்டர் எஞ்சினைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஜின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மோட்டார்சைக்கிளில் முன் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் ஒரு மோனோஷாக் யூனிட் உள்ளது. பிரேக்கிங்கிற்காக, ஹார்லி டேவிட்சன் X350 பைக்கில் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது
சீனாவைத் தவிர, ஹார்லி டேவிட்சன் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் புதிய மலிவு விலை மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஹார்லி டேவிட்சன் இந்தியச் சந்தையில் Hero MotoCorp உடன் கூட்டு முயற்சியில் உள்ளது. அதன் புதிய மலிவு விலை மோட்டார் சைக்கிள்கள் ராயல் என்ஃபீல்டு மற்றும் வரவிருக்கும் பஜாஜ்-ட்ரையம்ப் போன்ற மோட்டார் சைக்கிள்களுடன் போட்டியிடும்.