மூளைக்கு ஆபத்தான 7 டாக்ஸிக் உணவுகள்! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..
டாக்ஸ்க் உணவுகள்:
மூளையை மழுங்கடிக்க செய்யும் டாக்ஸிக் உணவுகள், இவற்றை சாப்பிட்டால் நினைவாற்றல் சக்தி அடிவாங்கலாம். என்னென்ன உணவுகள் தெரியுமா?
டிரான்ஸ் கொழுப்பு உணவுகள்:
டிரான்ஸ் கொழுப்பு நிறைந்த உணவுகள் மூளைக்கு தீங்கு விளைவிக்குமாம். உதாரணம், கேக், பிஸ்கெட்டுகள், மைக்ரோவேவில் செய்த பாப்கார்ன் உள்ளிட்ட பல.
இனிப்பு பானங்கள்:
பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்ட இனிப்பு பாலங்களால் உடலுக்கு மட்டுமல்ல மூளைக்கும் தீங்குதான். இது, டிமன்ஷியா (dementia) எனப்படும் மறதி நோய்க்கு வழிவகுக்கும் என ஒரு சமீபத்திய மருத்துவ ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பதப்படுத்தப்பட்ட பொருட்களில் இருந்து பெறப்பட்ட எண்ணெய்கள்:
ஒமேகா 6 போன்ற பதப்படுத்தப்பட்ட எண்ணெயில் செய்யும் பொருட்கள் அல்லது அந்த எண்ணெய்களே நம் மூளையை கெடுக்கும் ஆற்றல் உடையவையாம். ஆகையால் இதை அதிகம் சாப்பிட வேண்டாம் என மருத்துவர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்:
பதப்படுத்தப்பட்ட உணவுகள் நம் உடலையே கெடுத்துவிடும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இது மூளையை பாதிக்கவும் நினைவாற்றல் திறனை குறைக்கவும் வழிவகுக்கும் என அதிர்ச்சி அளிக்கின்றனர் மருத்துவர்கள்.
வறுத்த உணவுகள்:
எண்ணெயில் வறுத்த உணவுகள் மூளையை பாதிக்கும் எனவும், இதனால் வலிப்பு நோய்க்கு பலர் ஆளாவதாகவும் கூறப்படுகிறது.
மது நட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என எத்தனை இடங்களில் எழுதி ஒட்டினாலும் பலருக்கும் புரிவதில்லை. இது உடலுக்கு மட்டுமல்ல, மூளையின் செயல்பாட்டிற்கும் பெரும் தீங்கு விளைவிக்கிறதாம்.
சேர்க்கப்பட்ட சர்க்கரை உணவுகள்:
சர்க்கரை உணவுகளே நம் உடலுக்கு பெரும் தீங்கு விளைவிப்பவைதான். எனவே இவற்றை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)