செவ்வாய் கிரகத்தின் ஆளுமையால் பொறுமைசாலி என்று பெயர் வாங்கும் துணிச்சல்காரரா நீங்கள்?

Sat, 08 Jun 2024-10:05 pm,

சட்டென்று கோபம், அடிதடி, அதிரடி வாக்குவாதம், விதண்டாவாதம் ஆகிய குணங்களுக்கும் அதிபதி செவ்வாய் கிரகம்

தொழில் நுட்ப அறிவுக்கும் இயந்திரங்களை வடிவமைத்தல் மற்றும் இயந்திரங்களை ஞாபகமாக கையாளும் அறிவுக்கும் திறனுக்கும் ஆற்றலுக்கும் அதிபதி செவ்வாய்

உழைப்பு, ஆற்றல், நிர்வாக திறன், சுதந்திர மனப்பான்மை போன்றா குணங்களைக் கொடுப்பவர் செவ்வாய் தான்... 

ஜாதகத்தில் செவ்வாய் உச்சமாகவோ அல்லது 1, 4, 9, 10 ம். வீடுகளில் அமர்ந்தும், தனது சுயசாரத்தில் அமர்ந்திருந்தாலும், ஒருவர் கோடீஸ்வரனாக உயர்வார் 

கடின உழைப்பால் குறுகிய காலத்தில் உயர்ந்த அதிகாரப் பணியில் அமர வைக்கும் திறன் படைத்தவர் செவ்வாய்

ஒருவரின் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டிலோ அல்லது ஆறாம் வீட்டிலோ செவ்வாய் அமர்ந்திருந்து, அதுவும் சுய சாரத்தில் அமர்ந்திருந்தால் ஜாதகருக்கு வாழ்க்கையில் எல்லா சௌகரியங்களும் சுகங்களும் கிடைத்தாலும் விரோதிகளும் இருப்பார்கள்

ஜாதகத்தில் செவ்வாய் 11ம் அதிபதியாகி இருந்தால் அவருடைய திசையில் ஜாதகருக்கு ராஜயோகங்கள் கிடைக்கும்

தனுசு, சிம்மம், மேஷம், கடகம், மகரம் ஆகிய ஏதாவது ஒன்று லக்னமாக இருந்து அதில் செவ்வாயும் இருந்து சுயசாரத்தில் அமர்ந்திருந்தால் ஜாதகர் ஆட்சியாளராக இருப்பார் அல்லது அதிகாரம் மிக்க பணியில்  இருப்பார்

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்ற்றுள்ள தகவல்கள் பொதுவானவை.  பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link