பூமியை நெருங்கும் ஆஸ்டிராய்ட் எரிகற்கள்! அண்மையில் அச்சம் ஏற்படுத்திய 5 சிறுகோள்கள்
பூமியின் மேற்பரப்புக்கு அருகில் சிறுகோள்கள் வந்து செல்வது உலகில் பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்தலாம். பூமியை நோக்கி பயங்கர வேகத்தில் வரும் ஆபத்தான சிறுகோள்கள் மோதினால் என்ன ஆகும்?
பூமியை நெருங்கும் சிறுகோள்களில் அனைத்துமே பூமிக்கு பாதிப்ப ஏற்படுத்தாது என்றாலும், அவற்றின் வேகம், வீரியம், அவை வரும் பாதை என அனைத்து தகவல்களையும் நாசா கண்காணித்து வருகிறது.
40 மீட்டர் அகலமுள்ள சிறுகோள் ஜூலை 1 அன்று பூமியைக் கடந்து செல்கிறது 2023 ஜூன் 18ம் தேதியன்று கண்டுபிடிக்கப்பட்டது. சிறுகோள் 2023 MB6 பூமிக்கு அருகில் பறந்தது. இது விண்வெளியில் மணிக்கு 39,391 கிமீ வேகத்தில் பயணித்து, பூமிக்கு அருகில் சுமார் 2.33 மில்லியன் கிலோமீட்டர் என்ற அளவிற்குள் வந்தது.
(புகைப்படம்: ட்விட்டர்)
119 மீட்டர் அகலமுள்ள சிறுகோள் 2020 NC ஜூலை 2 அன்று பூமியை நெருங்கிவந்தது. இந்த சிறுகோள் மணிக்கு 27,873 கிமீ வேகத்தில் பயணித்தாலும், பூமிக்கு 5.3 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் சென்றது. நாசாவின் இணையதளத்தில் உள்ள படம் பூமிக்கு அடுத்துள்ள சிறுகோளின் சுற்றுப்பாதையை காட்டுகிறது.
(புகைப்படம்: மற்றவை)
2023 MT1 என அழைக்கப்படும் 13 மீட்டர் அகலமுள்ள சிறுகோள் ஜூலை 2 அன்று பூமியை நெருங்கியது. இந்த சிறுகோள், பூமிக்கு 1.1 மில்லியன் கிலோமீட்டர் அருகில் வந்து சென்றது
174 மீட்டர் அகலமுள்ள சிறுகோள், ஜூலை 5ஆம் தேதி பூமியை நெருங்க உள்ளது. 2023 HO6 என்ற சிறுகோள் ஜூலை 5 ஆம் தேதி பூமியை நெருங்கும். அதிர்ஷ்டவசமாக, இது, நமது கிரகத்தின் இரண்டு மில்லியன் கிலோமீட்டர் தொலைவுக்கு மேல் அருகில் வராது .
சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 2034 ME4 ஜூலை 6 அன்று பூமியை நெருங்கும் தோராயமாக 24 மீட்டர் அகலம் உள்ள இந்த சிறுகோள், 1.1 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் கடக்கும்