மூளை சுறுசுறுப்பாக இயங்க... தினம் திறந்த வெளியில் 10 நிமிடம் அமர்ந்தால் போதும்
தினமும் திறந்த வெளியில் சிறிது நேரம் ரிலாக்ஸ் செய்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். பலர் சூரியனிடம் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களின் அபாயத்தைத் தவிர்க்க நினைக்கின்றனர். அதனால் தங்கள் சருமத்திற்கு பாதிப்பு ஏற்படும் என நினைக்கின்றனர். ஆனால், அது முற்றிலும் தவறு.
செரோடோனின் ஹார்மோன்: புதிய காற்றில் ஆக்ஸிஜன் ஏராளமாக கிடைக்கிறது, இது மூளையில் செரோடோனின் அளவை அதிகரிக்கிறது. செரோடோனின் என்னும் ஹார்மோன் மனநிலையை ஒழுங்குபடுத்தி நிதானமாக செயல்பட உதவும்.
ஆற்றல் அளவு: திறந்த வெளியில் சிறிது நேரம் ரிலாக்ஸ் செய்வதன் மூலம் பல நோய்களில் இருந்து தப்பிக்கலாம் என்பதோடு உடலின் வலிமையை அதிகரிக்கிறது என்று ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது. ரோசெஸ்டர் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியில், இயற்கை சூழல் உடலின் ஆற்றலை 90 சதவீதம் அதிகரிக்கிறது என கூறப்பட்டுள்ளது
ஆக்ஸிஜன் அளவு: புதிய காற்றை உட்கார்ந்து சுவாசிப்பது உடலில் ஆக்ஸிஜனின் அளவை அதிகரிக்கிறது. இது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மனநிலையை மேன்படுத்தி மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி: இயற்கை சூழ்நிலையில் உட்கார்ந்திருக்கும் போது உடல் சூரிய ஒளியுடன் தொடர்பு கொள்ளும்போது, அது வைட்டமின் டி உற்பத்தி செய்யத் தொடங்குகிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்திருக்க வைட்டமின் டி மிக அவசியம்
தூக்கம்: தூக்கமின்மை பிரச்சனை இருப்பவர்கள், இயற்கை சூழலில் 10 நிமிடம் செலவழிப்பது பலன் தரும். புதிய காற்றை தொடர்ந்து சுவாசிப்பது தூக்க முறைகள் மேம்படும். நல்ல ஆழ்ந்த தரமான தூக்கம் கிடைக்கும்
தினமும், குறிப்பாக காலையில் 10 நிமிடங்கள் திறந்த வெளியில், பசுமை நிரம்பிய இடத்தில் நேரத்தை செலவிடுதல்பல அற்புதமான நன்மைகளை தரும் நிலையில், தினமும் இதனை செய்வதை வழக்கமாக கொள்ளுங்கள். இதனால் உடல் நிலையுடன் மன நிலையும் சிறப்பாக இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.