தொல்லைகள் தொடங்கும்: சூரியன், குரு, ராகுவால் உருவாகும் சண்டாள யோகம்... இந்த ராசிகளுக்கு பிரச்சனை
மாத ராசிபலன்: செப்டம்பர் மாதம் பல கிரக மாற்றங்கள் நிழகவுள்ளன. இவற்றின் தாக்கம் சுப மற்றும் அசுப விளைவுகளாக அனைத்து ராசிகளிலும் காணப்படும்.
சூரியன் பெயர்ச்சி: செப்டம்பர் மாதம் சூரியன் பெயர்ச்சியாகி கன்னி ராசிக்குள் நுழைகிறார். செப்டம்பர் 17ஆம் தேதி சூரியன் பெயர்ச்சி நடைபெறும். அதுவரை சூரியன் தனது சொந்த ராசியான சிம்மத்தில் இருப்பார்.
சனியும் ராகுவும்: சூரியனின் மகனான சனி தனது சொந்த ராசியான கும்ப ராசியிலும், ராகு மேஷத்திலும் இருப்பார்கள். செப்டம்பரில், சூரியன், சனி மற்றும் ராகு சேர்ந்து ஒரு கொடிய திருஷ்டியை ஏற்படுத்துகிறார்கள்.
குரு சண்டாள யோகம்: சூரியம், சனி, ராகு ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றையொன்று பார்த்துக் கொண்டிருக்கின்றன. இது தவிர மேஷ ராசியில் ராகு, குரு இணைவதால் குரு சண்டாள தோஷமும் உருவாகிறது.
ராசிகளில் தாக்கம்: குரு சண்டாள யோகத்துடன் செப்டம்பரில் சமசப்தக யோகமும் உருவாகிறது. இந்த யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராச்சிக்காரர்களுக்கு இந்த யோகங்களால் பல வித பிரச்சனைகள் ஏற்படலாம். செப்டம்பர் மாதம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
கடகம்: சனி, ராகு மற்றும் சூரியனின் அசுப அம்சம் கடக ராசிக்காரர்களுக்கு ஆபத்தானது. குரு சண்டாள யோகம் இவர்களுக்கு நல்லதல்ல. இந்த சூழ்நிலை இந்த நபர்களின் தொழிலில் ஏற்ற தாழ்வுகளை உருவாக்கும். இவர்களுக்கு பணம் கிடைக்கும் ஆனால் அதுவும் வேகமாக செலவழிக்கப்படும். மருத்துவமனை, மருந்துகளுக்கும் செலவு செய்யும் நிலை ஏற்படலாம். இந்த மாதம் முதலீடு மற்றும் வேலை மாற்றத்தை தவிர்ப்பது நல்லது.
கன்னி: சனி, ராகு மற்றும் சூரியனின் தீய சேர்க்கை கன்னி ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான பலன்களைத் தரும். இவர்கள் செப்டம்பரில் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும். விதிகள் மற்றும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். வேலை-வியாபாரத்தில் ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினால், சிறிது நேரம் கழித்து செய்யுங்கள். தொழிலை விரிவுபடுத்த இது சரியான நேரம் அல்ல. வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
விருச்சிகம்: சனி, ராகு மற்றும் சூரியனின் தீய அம்சம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு தீங்கு விளைவிக்கும். தொழில்-வியாபாரத்தில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம். இந்த நேரத்தை பொறுமையாக எடுத்துக்கொள்வது நல்லது, அதிக மாற்றத்தை கொண்டு வர முயற்சிக்காதீர்கள். யாருக்கும் கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும், பணம் சிக்கிக்கொள்ளலாம். புதிய வேலையைத் தொடங்க வேண்டாம். செப்டம்பர் மாதத்தை நிதானத்துடன் கழித்து நேர்மறையாக சிந்தியுங்கள்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவக்களை உறுதிப்படுத்தவில்லை.