சேமிப்புனா என்னனு கேட்கும் ராசிகள் இவை: பழத்தை தண்ணியா செலவு செய்வாங்க
ஜோதிட சாஸ்திரப்படி ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த ராசிக்காரர்கள் ஆடம்பரமாக வாழவும், பொருள் இன்பங்களை அனுபவிக்கவும் விரும்புகிறார்கள். அதிக பணம் செலவழிப்பதால், அவர்களிடம் அதிக பணம் தங்குவதில்லை. எதையாவது வாங்க வேண்டும் என்று நினைத்தால் அதை வாங்யபின் தான் இவர்களால் அமைதியாய் இருக்க முடியும்.
மிதுன ராசிக்காரர்களுக்கு ஆசைகள் பொதுவாக அதிகமாக இருக்கும். இவர்கள் தங்கள் நண்பர்களுக்காக அதிக பணம் செலவழிக்கிறார்கள். பெருமைக்காக அதிக பணம் செலவழிக்கும் நபர்கள் இவர்கள். இதன் காரணமாக சேமிக்க முடியாமல் தவிப்பது இவர்களது வழக்கம். இந்த ராசிக்கு அதிபதியாக புதன் கிரகம் கருதப்படுகிறது. ஆகையால், இவர்கள் தங்கள் புத்திசாலித்தனத்தால் அதிக பணம் சம்பாதிக்கிறார்கள். ஆனால் இயற்கையாகவே அதிகம் செலவழிக்கும் குணம் கொண்டிருப்பதால், இவர்களால் எதையும் சேமிக்க முடிவதில்லை.
ஜோதிட சாஸ்திரப்படி சிம்ம ராசிக்கு சூரிய பகவான் அருள்பாலிக்கிறார். அவர்கள் ஆடம்பர வாழ்க்கை முறையை விரும்புகிறார்கள். இது மட்டுமின்றி, இவர்களது பொழுதுபோக்குகளும் மிகவும் விலை உயர்ந்தவையாக இருக்கும். இவர்கள் தங்கள் வசதிக்காக பணத்தை தண்ணீரைப் போல செலவிடுகிறார்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவதால், இவர்களால் பணத்தை சேமிக்க முடிவதில்லை.
சுக்கிரன் துலா ராசியை ஆளும் கிரகமாக கருதப்படுகிறது. சுக்கிரனின் ஆசியால், ஒருபுறம் இந்த ராசிக்காரர்களுக்கு செல்வமும் செழிப்பும் வந்துகொண்டே இருக்கும். மறுபுறம் இவர்களது செலவழிக்கும் குணத்தால், பணம் தங்குவதில்லை. இந்த நபர்கள் தங்களை விட மற்றவர்களுக்காக அதிக பணத்தை செலவிடுகிறார்கள். அதனால்தான் இவர்களால் பணத்தைச் சேமிக்க முடிவதில்லை. இந்த ராசிக்காரர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதில் நம்பிக்கை கொண்டிருப்பார்கள். இவர்கள் எதிர்காலத்தைப் பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை.
சனியின் தாக்கம் கும்ப ராசிக்காரர்களில் காணப்படும். தேவையற்ற போலி பெருமையைக் காட்டுவதில் இவர்கள் ஆர்வம் கொள்வதுண்டு. சமுதாயத்தில் தங்கள் பெருமையை உயர்த்தவும், கௌரவத்தை அதிகரிக்கவும் இவர்கள் பணத்தை தண்ணீரைப் போல செலவழிப்பதுண்டு. இவர்கள் கையில் கொஞ்சம் பணம் வந்தால் போதும், உடனே அதைச் செலவழிக்கத் தொடங்குவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)