அக்டோபர் மாத ராசிபலன்: இந்த ராசிகளுக்கு நெருக்கடியான காலம், எச்சரிக்கை தேவை
அக்டோபர் மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்படும். வேண்டும் என நினைக்கும் விஷயங்கள் கிடைக்காமல் போகலாம். தொழில், வியாபாரத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். கிரக நிலை மாற்றத்தால் செலவுகள் கூடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கொஞ்சம் யோசித்த பிறகே பணத்தைச் செலவு செய்யுங்கள். இல்லையென்றால் கடன் வாங்கும் சூழ்நிலையும் உருவாகும்.
கடக ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் சற்று சவாலான மாதமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் சம்பந்தமான சங்கடங்கள் ஏற்படலாம். அதனால் சவாலான சூழல் உருவாகலாம். உறவினர்களுக்கு இடையே கசப்பான வாக்குவாதங்கள் வரக்கூடும். ஆகையால், எதையும் சொல்லும் முன் யோசித்து சொல்லுங்கள். இல்லையெனில், பின்னர் வருத்தப்பட வேண்டி வரலாம். திருமண வாழ்விலும் சில பிரச்சனைகள் வரலாம். உங்கள் நெருங்கிய சொந்தங்களுக்கு நேரத்தை ஒதுக்குங்கள். அது நிச்சயமாக பயனளிக்கும்.
அக்டோபர் மாதத்தில் கிரகங்களின் நிலை மாறுவதால் கன்னி ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த ராசிக்காரர்கள் பொருளாதார ரீதியாக சிரமங்களை சந்திக்க நேரிடும். மறுபுறம், சிலரது காதல் வாழ்க்கை இந்த மாதம் சற்று சவாலானதாக இருக்கும். எனவே கொஞ்சம் பொறுமையாக இருங்கள். குடும்ப மகிழ்ச்சிக்கு பொறுமை மிக அவசியம். இதனுடன், உறவில் கசப்பு ஏற்படாமல் இருக்க, உங்கள் பேச்சில் கொஞ்சம் கட்டுப்பாட்டை வைத்திருங்கள்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் சற்று தொல்லை தரும். இந்த மாதம் நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடும். வீண் செலவுகளில் சற்று கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். அப்போதுதான் நல்லது நடக்கும்.
மீன ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் சற்று சவாலாக இருக்கும். அக்டோபர் மாதத்தில் பல கிரகங்களின் நிலை மாறுகிறது. இத்தகைய சூழ்நிலையில், மீன ராசிக்காரர்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். இதனுடன், வேலை மற்றும் வியாபாரத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.