இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் புது வரவுகள்! எந்த படத்தை, எந்த தளத்தில் காணலாம்?

Fri, 26 Jul 2024-4:14 pm,

சத்யராஜ், விஜய் வசந்த் நடிப்பில் வெளியான படம் வெப்பன். இந்த படத்தை ஆஹா தமிழ் தளத்தில் வரும் ஜூலை 26ஆம் தேதி முதல் பார்க்கலாம். 

காழ்:

பாடகரும் நடிகருமான யுகேந்திரன் நடித்திருக்கும் படம் காழ். இந்த படத்தை நாளை முதல் ஆஹா தமிழ் தளத்தில் காணலாம். 

சட்னி சாம்பார் :

யோகி பாபு, மைனா நந்தினி உள்ளிட்டோர் நடித்திருகும் வெப் தொடர் ‘சட்னி சாம்பார்’. இதனை ஹாட்ஸ்டார் தளத்தில் ஜூலை 26ஆம் தேதி காணலாம். 

பவி கேர்டேக்கர்:

காமெடி கதையாக உருவாகியிருக்கும் பவி கேர்டேக்கர் மலையாள படத்தை சிம்ப்ளி சவுத் தொலைக்காட்சியில் நாளை முதல் காணலாம்.

எவ்வம் (Yevam):

இந்த தெலுங்கு படத்தை ஆஹா தளத்தில் நாளை முதல் காணலாம்.

ஒன் லைஃப்:

ஒன் லைஃப் ஆங்கில படத்தை பிஎம்எஸ் அல்லது ப்ரைம் தளத்தில் காணலாம். இது, ஜூலை 26ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. 

கிராண்ட்மா:

சோனியா அகர்வால் நடித்திருக்கும் கிராண்ட்மா திரைப்படத்தை, தெலுங்கில் ஆஹா தளத்தில் நாளை முதல் காணலாம். 

செஃப் சிதம்பரா:

செஃப் சிதம்பரா கன்னட படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் நாளை முதல் காணலாம்.

ப்ளடி இஷ்க்:

ப்ளடி இஷ்க் இந்தி பேய் த்ரில்லர் தொடரை, ஹாட்ஸ்டாரில் நாளை முதல் காணலாம்.

பையா ஜீ:

பையா ஜீ இந்தி படத்தை ஜீ 5 தளத்தில் நாளை முதல் காணலாம்.

மேற்கூறிய படங்களை தவிர இன்னும் சில படங்களும் தொடர்களும் கூட ஓடிடியில் வரும் ஜூலை 26ஆம் தேதி வெளியாகின்றன. அதன் லிஸ்டை இங்கு பார்ப்போம். 

>எக்கோரி பிரேம் கதா - இந்தி - ஜியோ சினிமா >பரதநாட்டியம் - தெலுங்கு -ஆஹா >சல்தி ரஹே ஜிந்தகி - இந்தி - ஜீ 5 >க்லியோ சீசன் 2 - ஜெர்மன் - நெட்ஃப்ளிக்ஸ் >தி டெகேமரான் - ஆங்கிலம் - நெட்ஃப்ளிக்ஸ் >டோக்கியோ ஸ்விண்ட்லர்ஸ் - ஜப்பானிய மொழி - நெட்ஃப்ளிக்ஸ் >கோஸ்ட் பஸ்டர்ஸ் ஃப்ரோசன் எம்பையர் - ஆங்கிலம் - நெட்ஃப்ளிக்ஸ் >விச் பிரிங்க்ஸ் மீ டு யூ - ஆங்கிலம் - ஜியோ சினிமா >ஸ்வயம்வரம் சம்பவ பாகுலம் - மலையாளம் - மனோரமா மேக்ஸ்

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link