செப்டம்பரில் வெளியாகவிருக்கும் மாஸ் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ..
நடிகர் யோகி பாபு, நடிகை லட்சுமி மேனன் உடன் இணைந்து மலை என்ற படத்தில் நடிப்பதாக 2022இல் அறிவிக்கப்பட்டது. இயக்குநர் சுசீந்திரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கொங்கனி மலையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்த வருகிற செப்டம்பர் மாதம் வெளியாகிறது.
இந்தியாவிலேயே அதிக கிராஃபிக்ஸ் காட்சிகள் கொண்ட முதல் திரைப்படமாக உருவாகி இருக்கும் மாயன் திரைப்படம் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
நடிகர் துல்கர் சல்மான் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் நாயகியாக மீனாட்சி செளத்ரி நடிக்கிறார். ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். லக்கி பாஸ்கர் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றது. மேலும், இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இயக்குநர் பிரேம் குமார் நடிகர் கார்த்தியை வைத்து புதிய படத்தை இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம் கார்த்தியின் 27-வது படமாகும். இப்படத்துக்கு 'மெய்யழகன்' எனப் பெயரிட்டுள்ளனர். நடிகர் அரவிந்த் சுவாமியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மெய்யழகன் வருகிற செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகிறது.
சத்யராஜின் ‘தோழர் சேகுவேரா’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வருகிற செப்டெம்பர் மாதம் இந்த படம் வெளியாகிறது.
தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படம் வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது.