ஆதார் பயோமெட்ரிக் அப்டேட் செய்வது எப்படி?

Sat, 20 May 2023-9:59 pm,

மத்திய அரசின் UIDAI ஜுன் 14 வரை ஆன்லைனில் ஆதார் அப்டேட்களை இலவசமாக மேற்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. அதுவும் ஆன்லைனில் மட்டுமே இலவசமாக செய்யப்படும். இ-சேவை மையங்கள், தபால் நிலையங்களில் செய்ய ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. ஆதார் பயோமெட்ரிக் எவ்வாறு அப்டேட் செய்வது எப்படி? என்பதை பார்க்கலாம்.

உங்கள் அருகில் உள்ள ஆதார் மையம், தபால் நிலையம், இ-சேவை மையங்களுக்கு செல்லவும். ஆதார் Enrolment/ அப்டேட் விண்ணப்பத்தை பெற்று நிரப்ப வேண்டும்.

 

அதை ஆதார் மைய நிர்வாகியிடம் கொடுத்து உங்கள் ஆதார் விவரங்களை கூற வேண்டும். இப்போது உங்கள் பயோமெட்ரிக் டேட்டா கைரேகை (fingerprints) அல்லது கண் (iris) ஸ்கேன் செய்யப்படும்.

 

ஆதார் மைய நிர்வாகி உங்கள் ஆதார் விவரங்களை சரிபார்த்து UIDAI தளத்தில் அப்டேட் செய்வார். அவ்வளவு தான். சேவை கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படும்.

 

பெரும்பாலான ஆதார் அப்டேட் சேவைகள் ஆதார் மையம், தபால் நிலையங்களில் மட்டுமே செய்யப்படுகிறது. சிறிய அளவிலான சேவைகளுக்கு மட்டுமே ஆன்லைனில் செய்ய முடியும்.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link