யுபிஎஸ்: அரசு ஊழியர்களுக்கு அமோகமான பலன்கள், சம்பளத்தில் 19% உயர்வா? முழு கணக்கீடு இதோ

Tue, 27 Aug 2024-9:50 am,

மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசாங்கம் ஒரு மிகப்பெரிய பரிசை அளித்துள்ளது. மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (Unified Pension Scheme) மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) ஆகியவற்றுக்குப் பதிலாக புதிய ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்துவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன் கீழ், தற்போதுள்ள ஓய்வூதியதாரர்களுக்கு என்பிஎஸ் மற்றும் ஓபிஎஸ்க்கு பதிலாக ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அதாவது UPS-க்கான விருப்பம் வழங்கப்படும். ஏப்ரல் 2004க்குப் பிறகு பணியைத் தொடங்கிய அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் இந்த வசதி கிடைக்கும். 

மத்திய அரசு கடந்த சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 24) ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. மத்திய அரசின் இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (Unified Pension Scheme) என்று பெயரிடப்பட்டுள்ளது. நீண்ட காலமாக தேசிய ஓய்வூதிய அமைப்பு மத்திய அரசுக்கு ஒரு மிகப்பெரிய நெருடலான விஷயமாக இருந்து வந்தது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் மத்திய அரசை குற்றம் சாட்டி வந்தனர். இது ஒரு மிகப்பெரிய தேர்தல் விவாதமாகவும் பேசப்பட்டது. தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்களுக்கு உரிய ஓய்வூதியத்தை அரசு மறுப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின.

UPS ஓய்வூய முறையில் சேரும் மத்திய அரசு ஊழியர்கள்,  இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் அதிக பயன்களை அடைவார்கள் என மத்திய அரசு தெரிவிக்கிறது. இதற்கு ஒரு முக்கியமான காரணம் உள்ளது. UPS -இல் ஓய்வூதிய நிதியில், தற்போது 14% ஆக இருக்கும் பங்களிப்பு இனி 18.5 சதவீதமாக உயரும். இதன் காரணமாக அரசு ஊழியர்களின் சம்பளத்தில் நேரடியாக 19 சதவீத அதிகரிப்பு (ஊதிய உயர்வு) ஏற்படக்கூடும் என டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்காக யூடிஐ பென்ஷன் ஃபண்ட் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஊழியரின் மாதச் சம்பளம் ரூ.50,000 வரை இருந்தால் மட்டுமே அவர் அதன் பயனாளியாக முடியும் என்பது போன்ற சில விதிகளும் இதில் உள்ளன. 

தற்போது, ​​இந்தத் திட்டத்தின் மூலம், ஊழியர்களின் ஆண்டு ஊதியத்தில் 3 சதவீதம் உயரக்கூடும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இது அதிகரித்து 8 சதவிகிதம் CAGR அதாவது கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதமாக அதிகரிக்கும். இருப்பினும், UTI அறிக்கையில் ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஊதியக்குழு மூலம் ஏற்படும் உயர்வுகள் சேர்க்கப்படவில்லை. தற்போது செய்யப்பட்டுள்ள கணக்கீட்டின் படி, ஓய்வூதிய கார்பஸ் அல்லது ஓய்வூதிய நிதி இன்னும் அதிகமாகவும் இருக்கலாம்.

UPS ஏப்ரல் 1, 2025 முதல் செயல்படுத்தப்படும், இதன் கீழ், அரசு ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு நிலையான ஓய்வூதியம் கிடைக்கும். அரசாங்கம் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை இயல்புநிலை அதாவது டீஃபால்ட் ஓய்வூதியத் திட்டமாக மாற்றவில்லை. மாறாக தற்போதுள்ள தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கு ஒரு மாற்றாக இது கருதப்படலாம். நாடு முழுவதும் உள்ள 90 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் இந்த ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் நேரடியாகப் பயனடையக்கூடும். 

மத்திய அரசு ஊழியர்களுக்காக தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஜனவரி 1, 2004 அன்று, OPS -க்குப் பதிலாக என்பிஎஸ் கொண்டுவரப்பட்டது. இதற்குப் பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் என்பிஎஸ்ஸின் கீழ் சேர்க்கப்பட்டனர். ஆனால், OPS -க்கு நிகரான பயன்கள் NPS -இல் இல்லாததால் பல மாநிலங்கள் NPS ஐ நீக்கிவிட்டு மீண்டும் OPSக்கு செல்ல முடிவு செய்தன. இதில் இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், பஞ்சாப் ஆகியவை அடங்கும்.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் சுமார் 23 லட்சம் பேர் (அரசு ஊழியர்கள்) நேரடியாகப் பயனடைவார்கள் என மத்திய அரசு கூறியுள்ளது. இது தவிர, NPS க்கு தகுதி பெற்ற அனைத்து அரசு ஊழியர்களும் அதன் பலன்களைப் பெற தகுதியுடையவர்களாவார்கள். அதாவது, ஏப்ரல் 1, 2004க்குப் பிறகு வேலையில் சேர்ந்த அனைத்து அரசு ஊழியர்களும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களைப் பெறலாம்.

UPS -க்கு தகுதியுள்ள அனைத்து ஊழியர்களும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களைத் தானாகப் பெற முடியாது. அவர்களுக்கு அதற்கான ஆப்ஷன் வழங்கப்படும். ஊழியர்கள் NPS -இலேயே இருக்க விரும்பினால், ஆவர்கள் இருக்கலாம். ஆனால் புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களைப் பெற, ஊழியர்கள் UPS விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். UPS -இன் முக்கிய அம்சங்கள் பற்றி தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியவற்றை இங்கே காணலாம்.

ஓய்வூதிய உத்தரவாதம்: UPS மூலம் பணி ஓய்வுக்குப் பிறகு ஊழியர்கள் ஒரு நிலையான ஓய்வூதியத்தைப் பெறலாம். அது ஓய்வுக்கு முந்தைய 12 மாதங்களின் சராசரி அடிப்படைச் சம்பளத்தில் 50 சதவீதமாக இருக்கும். குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணிபுரிந்துள்ள  ஊழியர்களுக்கு மட்டுமே இந்த நிலையான ஓய்வூதியம் கிடைக்கும்.

நிலையான குறைந்தபட்ச ஓய்வூதியம்: ஒரு ஊழியர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றால், அவருக்கு நிலையான குறைந்தபட்ச ஓய்வூதியமாக 10,000 ரூபாய் கிடைக்கும்.

குடும்ப ஓய்வூதிய உத்தரவாதம்: UPS திட்டத்தின் கீழ்  உத்தரவாதமான குடும்ப ஓய்வூதியமும் கிடைக்கும். இந்த ஓய்வூதியம் ஒரு ஊழியர் இறந்த பிறகு அவரது குடும்பத்திற்கு வழங்கப்படும்.

பணவீக்க குறியீட்டு பலன்: இந்த மூன்று ஓய்வூதிய முறைகளிலும், தற்போதைய பணவீக்கத்தின் படி, ஊழியர்கள் அகவிலைப்படியை (Dearness Allowance) பெறுவார்கள். 

பணிக்கொடையாக மொத்த தொகை: பணியாளரின் கடைசி 6 மாத சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் மொத்த தொகையாக வழங்கப்படும். இது ஊழியரின் கடைசி அடிப்படை சம்பளத்தில் 1/10 ஆக இருக்கும்.

பொறுப்பு துறப்பு: இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. UPS பற்றிய முழுமையான சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link