LDL கொலஸ்ட்ராலை கச்சிதமாய் கட்டுப்படுத்தும் வீட்டு வைத்தியங்கள்: முழு லிஸ்ட் இதோ
சில எளிய இயற்கையான வழிகளில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கலாம். நமது டயட் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. கெட்ட கொழுப்பை கரைத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சில இயற்கையான ஆரோக்கியமான உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஓட்ஸ் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளவர்களுக்கு ஏற்ற காலை உணவாக இது பார்க்கப்படுகின்றது. இது நாள் முழுதும் வயிற்றுக்கு நிறைவான உணர்வை அளிப்பதோடு கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுப்படுத்தும்.
பூண்டில் உள்ள அலிசின் என்ற கலவை கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. பூண்டை பச்சையாகவும் சாப்பிடலாம், அல்லது பல வகையான உணவுகளில் சேர்த்தும் உட்கொள்ளலாம். பூண்டு உணவிற்கு சுவையை சேர்ப்பதோடு இதில் பல வித ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. இது கெட்ட கொழுப்பை வேகமாக்க குறைக்க உதவும்.
க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை கொலஸ்ட்ரால் அதிகரிப்பதைத் தடுக்க உதவுகின்றன. தினமும் 2-3 கப் க்ரீன் டீ குடிப்பது அதிக கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும். இது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகின்றது.
நட்ஸ்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கவும், கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் உதவுகின்றன. பாதாம், அக்ரூட் பருப்புகள் போன்ற உலர் பழங்களும் ஆளி விதைகள் மற்றும் சியா விதைகள் போன்ற விதைகளும் கெட்ட கொழுப்பை குறைக்க சிறந்தவையாக கருதப்படுகின்றன.
ஓட்ஸ், கினோவா மற்றும் பழுப்பு அரிசி போன்ற முழு தானியங்களில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இவை கொழுப்பின் அளவைக் குறைக்க பெரிதும் உதவுகின்றன. மேலும் முழு தானியங்கள் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன.
மஞ்சளில் குர்குமின் என்ற கலவை உள்ளது. இது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. மஞ்சளை பாலில் கலந்து குடிக்கலாம் அல்லது உங்கள் உணவுகளில் சேர்த்துக்கொள்ளலாம். மஞ்சள் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் அபாயத்தைக் குறைக்க உதவும். மஞ்சளை வெந்நீரில் கலந்தும் குடிக்கலாம்.
சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் மத்தி போன்ற மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை வீக்கத்தைக் குறைத்து இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகின்றன. இதனுடன், இவை ட்ரைகிளிசரைடுகளையும் குறைக்கிறன. இது ஒரு வகையான கொழுப்பாகும். இது உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது. ஆனால் அது அதிகமானால், அது உடல் பருமனை ஏற்படுத்துவதோடு கெட்ட கொலஸ்ட்ராலையும் அதிகரிக்கச்செய்யும்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.