Valentine`s Day 2024: கிஸ் டே, ஹக் டே, எந்த நாளில் எதை கொண்டாடுவது? காதலர் தின ஸ்பெஷல்!
பிப்ரவரி 14ஆம் தேதி, காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் பலர் ஜோடியாக இருப்பர், பலர் சிங்கிளாக இருப்பர். இந்த தினத்தை காதலை வெளிப்படுத்துவதற்காக மட்டுமன்றி, உங்களது அன்புக்குரியவர் உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமான இடத்தை பெற்றிருக்கிறார் என்பதை காண்பிக்கவும் உபயோகப்படுத்தி கொள்ளுங்கள். காதலர் தினத்திற்கு முன்பு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தினம் கொண்டாடப்படுகிறது. இதில் எந்த நாளில் எதை கொண்டாட வேண்டும் என்ற குழப்பம் அனைவருக்கும் உள்ளது. அதற்குரிய கேலண்டரை இங்கு பார்க்கலாம், வாங்க.
ரோஸ் டே-பிப்ரவரி 7ஆம் தேதி ரோஸ் டே கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு ரோஜா, அல்லது அவர்களுக்கு பிடித்த மலரை வாங்கி கொடுத்து மகிழ்ச்சிப்படுத்துங்கள். சிகப்பு ரோஸ்-காதலை குறிக்கும், மஞ்சள் ரோஜா, நட்பை குறிக்கும், பிங்க் ரோஜா-அவர்களை ரசிப்பதன் குறியீடு.
ப்ரப்போஸ் டே-பிப்ரவரி 8: உங்கள் காதலை தெரிவிக்க இந்த தினத்தை நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். உங்களுக்கு யார் மீதாவது க்ரஷ் இருந்தால் இந்த தினத்தை பயன்படுத்தி அவருக்கு காதலை தெரிவித்து விடுங்கள்.
சாக்லேட் டே:பிப்ரவரி 9ஆம் தேதி சாக்லேட் டே கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து ரிலேஷன்ஷிப்பை அடுத்த அடிக்கு கொண்டு செல்லுங்கள்.
டெடி டே: பிப்ரவரி 10ஆம் தேதி டெடி டே கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் உங்கள் அன்புக்குரியவருக்கு அவருக்கு பிடித்த பொம்மையை வாங்கி கொடுத்து குஷி படுத்துங்கள்.
ப்ராமிஸ் டே: பிப்ரவரி 11ஆம் தேதி இந்த தினம் கொண்டாடப்படுகிறது. காதலர்கள், தங்களுக்குள் இருக்கும் உறவு குறித்தும், அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அன்பையும் பாதுகாக்க, பரிமாறிக்கொள்ள இந்த தினம் உதவும்.
ஹக் டே-பிப்ரவரி 12ஆம் தேதி ஹக் டே கொண்டாடப்படுகிறது. தமிழில் இதனை கட்டிப்பிடி வைத்தியம் என்பர். கட்டிப்பிடித்தலில் காமம் தாண்டி அன்பை பரிமாறிக்கொள்ள நல்ல வழியாகும். அதனால் இந்த தினத்தில் உங்கள் அன்புக்குரியவரை இருக்கமாக கட்டிப்பிடியுங்கள்.
கிஸ் டே: காதலர் தினத்திற்கு முந்தைய தினமான, பிப்ரவரி 13ஆம் தேதியன்று கிஸ் டே கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் உங்கள் அன்புக்குரியவரை கட்டிப்பிடித்து முத்தமழை பொழிந்து அவரை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்.
காதலர் தினம்: பிப்ரவரி 14ஆம் தேதியன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை உங்கள் அன்புக்குரியவருடன் எங்காவது வெளியில் சென்று, அவருக்கு பிடித்த விஷயங்களை செய்து அன்பை பரிமாறிக்கொள்ளலாம்.