வாரிசு ஆடியோ ரிலீஸ் மற்றும் டிரெய்லர் தேதி இதோ..!

Fri, 16 Dec 2022-1:10 pm,

வரும் பொங்கல் வாரிசு மற்றும் துணிவு பொங்கலாக இருக்கப்போகிறது. விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் படங்கள் நேருக்கு நேர் மோத இருக்கின்றன.

துணிவு படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட இருக்கும் நிலையில், வாரிசு படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட இருக்கிறது.

இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியானாலும், இப்போதைக்கு வாரிசு படத்துக்கு அதிக தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

இதனால், வாரிசு படத்தின் முழு அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நேரத்தில் வாரிசு படத்தின் ஆடியோ ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யின் வாரிசு படத்தின் ஆடியோ ரிலீஸ் டிசம்பர் 24 ஆம் தேதி அல்லது இம்மாத இறுதிக்குள் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆடியோ ரிலீஸூக்குப் பிறகு படத்தின் டிரெய்லர் எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link