இன்னும் 14 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், பதவி, மாக அதிர்ஷ்டம் பெறப்போக்கும் ராசிகள் இவையே

Tue, 13 Aug 2024-2:54 pm,

ஒன்பது கிரகங்களில் சுக்கிரனுக்கு தனி இடம் உள்ளது. துலாம் மற்றும் ரிஷபம் ராசிகளின் அதிபதியான சுக்கிரம் அன்பு, மகிழ்ச்சி, செழிப்பு, அழகு போன்றவற்றை அள்ளித் தருவார். 

ஆகஸ்ட் மாதத்தில் சுக்கிரனின் மூன்று முறை பெயர்ச்சி அடைய உள்ளார். சுக்கிரனின் ராசி மற்றும் நட்சத்திர மாற்றம் 12 ராசிகளின் வாழ்க்கையிலும் சுப மற்றும் அசுப விளைவுவை ஏற்படுத்தும். எனவே இந்த மூன்று பெயர்ச்சியால் எந்த ராசிகளுக்கு நிதி ஆதாயம், அதிர்ஷ்டம், பதவி கிடைக்கும்.

ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி காலை 11:15 மணிக்கு சுக்கிரன் நட்சத்திர மாற்றம் பூரம் நட்சரத்திரத்தில் ஏற்பட்டது. தற்போது ஆகஸ்ட் 22 அன்று, சுக்கிரன் மீண்டும் தனது நட்சத்திரத்தை மாற்றுவார். இம்முறை காலை 08:07 மணிக்கு சுக்கிரன்  உத்திரம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைவார். அதன் பிறகு ஆகஸ்ட் 25 அதிகாலை 01:24 மணிக்கு கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைவார். 

 

கன்னி: காதலுக்கு காரணி கிரகமான சுக்கிரன் திருமண வாழ்க்கையை வலுவூட்டுவார். குடும்பத்தில் புதிய விருந்தினரின் வருகை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுக்களை பெறலாம். மாணவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணம் சம்பாதிக்க பல புதிய வாய்ப்புகளை பெறலாம்.

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் சுக்கிரனின் மழை பொழியும். மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியில் சேர்க்கை பெறலாம். மன உளைச்சல் குறையும். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். நீதிமன்ற வழக்கில் சாதகமான தீர்வு கிடைக்கும்.

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சியால் அதிக பலன் கிடைக்கும். ஆகஸ்ட் 25க்கு முன் மாணவர்கள் நல்ல செய்திகளை பெறலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இதனால் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையும்.

சுக்கிர யோகம் பெற, ஓம் அச்வத்வஜாய வித்மஹே.. தனூர் ஹஸ்தாய தீமஹி.. தன்னோ சுக்ரப்ரயோதயாத் என்கிற சுக்கிர காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்யவும்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.    

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link