இன்னும் 2 நாட்களில் சுக்கிரன் உச்ச பெயர்ச்சி: பணம், பொற்காலம், ராஜராஜ வாழ்க்கை இந்த ராசிகளுக்கு

Fri, 09 Aug 2024-1:12 pm,

ஆகஸ்ட் 11 ஆம் தேதி காலை 11.15 மணிக்கு பூர்வ நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைந்து ஆகஸ்ட் 22 வரை இதே நட்சத்திரத்தில் இருப்பார். ஜோதிடத்தின்படி, சுக்கிரனின் இந்த நட்சத்திர மாற்றம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணம், புகழ், பொன்னான வாழ்க்கை, நிதி ஆதாயத்தை தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.  

 

மிதுனம்: சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு நன்மை தரும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தொழிலில் மகத்தான வெற்றியைப் பெறுவீர்கள். தொழிலில் அபரிமிதமான வெற்றியும், நிதி ஆதாயமும் உண்டாகும். பந்தயம் மற்றும் ஷேர் மார்க்கெட்டில் பணம் குவியும்.

கடகம்: சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மையான பலனைத் தரும். அதிர்ஷ்டம் பெருகும். அனைத்து துறைகளிலும் வெற்றி பெறலாம். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். நிதி ஆதாயம் உண்டாகும். லாபம் பெருகி செல்வம் குவியும்.

சிம்மம்: சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். பதவி உயர்வும் கிடைக்கலாம். வேலை செய்யும் இடத்தில் பண வரவு கிடைக்கலாம். வியாபாரத்தில் லாபம் பெருகும். கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

துலாம்: சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு வருமானம் பெரிய அளவில் அதிகரிப்பை தரும். இந்த ராசிக்காரர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கக்கூடும். வெளியில் சிக்கியிருந்த பணத்தை நீங்கள் திரும்பப் பெறலாம். தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம்.

 

தனுசு: சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கலாம். தொழிலில் வளர்ச்சி ஏற்படும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமணம் நடக்கலாம். வியாபாரத்தில் லாபம் பெருகும். 

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் செல்வச் செழிப்பு உண்டாகும். எதிர்பாராத இடத்தில் இருந்து பண மழை கொட்டும். பணியிடத்தில் சக ஊழியர்களின் முழுமையான ஆதரவைப் பெறுவீர்கள். திருமணம் நிச்சயிக்கப்படலாம். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

வெள்ளிக்கிழமை தோறும் சுக்கிர காயத்ரி சொல்லி வழிபடுங்கள்.

சுக்கிர பகவான் காயத்ரி : ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே தனுர் ஹஸ்தாய தீமஹி தந்நோ சுக்ர ப்ரஜோதயாத்

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.    

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link