சுக்கிரன் பெயர்ச்சி.. மகா அதிர்ஷ்டம், பணம், பொற்காலம் இந்த ராசிகளுக்கு

Mon, 02 Sep 2024-10:28 am,

செல்வம், செழிப்பு, அதிர்ஷ்டம், அன்பு ஆகியவற்றை அள்ளிக் கொடுக்கும் கிரகம் சுக்கிரன். அந்த வகையில் சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி எந்தெந்த ராசிகளுக்கு அப்படிப்பட்ட பலன்களை தரும் என்று பார்ப்போம்.

ஜோதிடத்தின் படி, இன்று அதிகாலை 05:20 மணிக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி அடைந்துள்ளது. அதேபோல் சுக்கிரன் 27  நட்சத்திரராசிகளில் 13 வது நட்சத்திரத்தில் (ஹஸ்தா நட்சத்திரம்) பெயர்ச்சி அடைந்துள்ளார். இதற்குப் பிறகு, செப்டம்பர் 13, 2024 அன்று, சுக்கிரன் மீண்டும் தனது நட்சத்திரதை மாற்றுகிறார், அதிகாலை 03 மணிக்கு, சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்கு நுழைவார்.

ஹஸ்த நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி அடைந்துள்ளது சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும். வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். பண பலன்கள் கிடைக்கலாம். தொழிலதிபர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம்.

ஹஸ்தா நட்சத்திரத்தில் சுக்கிரன் நுழைந்துள்ளது கன்னி ராசிக்காரர்களுக்கு நன்மை தரும். நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவிட முடியும். அன்னை லட்சுமியின் சிறப்பான ஆசீர்வாதம் கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். நிதி நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்கள்.

மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் ராசி மாற்றத்தால் வெற்றி கிடைக்கும். திருமணத்தில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். வரும் நாட்களில் திடீர் நிதி ஆதாயம் உண்டாகும். பணப் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

சுக்கிர யோகத்தை பெற, ஓம் அச்வத்வஜாய வித்மஹே.. தனூர் ஹஸ்தாய தீமஹி.. தன்னோ சுக்ரப்ரயோதயாத் என்கிற சுக்கிர காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்யவும்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.      

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link