சுக்கிரன் பெயர்ச்சி.. வெற்றி மழை, மகா பொற்காலம் இந்த ராசிகளுக்கு
ஆடம்பரத்திற்கும் அழகியலுக்கும் காரணகர்த்தாவான சுக்கிரன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாதம் ஒருமுறை இடம் பெயர்வார். சுக்கிரன் என்றால் இன்பம். மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர். அதேபோல் சுக்கிரன் கிரகமானது சுக போகங்களின் அதிபதி ஆவார்.
சுக்கிரன் வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுப்பவர். இந்த சுக்கிரன் தனது ராசி அல்லது நட்சத்திரத்தை மாற்றும் போதெல்லாம், அதன் பலன் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். அந்த வகையில் வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடையப் போகிறார்.
சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் தெரியும். எனினும் சில ராசிக்காரர்களுக்கு இது மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு செல்வ மழை, வெற்றி மழை பொழியும். அந்த ராசிகளைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.
சித்திரை நட்சத்திரத்தில் சுக்கிரனின் பெயர்ச்சி ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பலன் தரும். நம்பிக்கை அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும். வருமானம் உயரும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். முதலீடு மூலம் லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி பயில இந்த நேரம் சாதகமாக அமையும். மரியாதை அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
சித்திரை நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான தாக்கத்தை தரும். தொழிலை விரிவுபடுத்தலாம். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்களின் வாழ்க்கையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். அரசுப் பணிகளுக்குத் தயாராகும் போட்டியாளர்கள் ஆதாயமடைவார்கள். காதல் வாழ்க்கையில் உறவுகள் வலுவடையும்.
சித்திரை நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி அடைவது விருச்சிக ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். புதிய நபர்களை சந்திப்பீர்கள். வருமானம் அதிகரிக்கும். நிதி நிலைமை பலப்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நல்ல ஆரோக்கியம் உங்கள் மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.
சுக்கிர யோகத்தை பெற, ஓம் அச்வத்வஜாய வித்மஹே.. தனூர் ஹஸ்தாய தீமஹி.. தன்னோ சுக்ரப்ரயோதயாத் என்கிற சுக்கிர காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்யவும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.