சுக்கிரனின் அருளால் இந்த ராசிகள் நினைத்தது நடக்கும், கேட்டது கிடைக்கும்
செப்டம்பர் 24 ஆம் தேதி காலை 8:51 மணிக்கு கன்னி ராசியில் சுக்கிரன் நுழையவுள்ளார். சூரியன் ஏற்கனவே கன்னி ராசியில் இருக்கிறார். புதன் கன்னி ராசியில் வக்ர நிலையில் உள்ளார். அப்படிப்பட்ட நிலையில் சுக்கிரன் கன்னி ராசியில் நுழைவதால் இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கை உருவாகும். இந்த சேர்க்கையால் இந்த ராசிக்காரர்கள் அதன் சிறப்பான பலனைப் பெறப் போகிறார்கள்.
கன்னி ராசியில் சுக்கிரன் நுழைவதால் ரிஷப ராசிக்காரர்களுக்கு நன்மைகள் உண்டாகும். ரிஷபத்தை ஆளும் கிரகம் சுக்கிரன் ஆகும். சுக்கிரனின் சஞ்சாரத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மரியாதையும் மதிப்பும் அதிகரிக்கும். நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் முடிவடையும். நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால், இந்த நேரம் அதற்சாதகமானது. இந்த காலகட்டத்தில் நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. மேலும், இந்த காலகட்டத்தில் வியாபாரத்தில் நல்ல பண ஆதாயம் கிடைக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள்.
மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் மேலோங்கும். மேலும், இந்த காலகட்டத்தில் வருமானம் கூடும். சுக்கிரனின் சஞ்சாரத்தால் இந்த ராசிக்காரர்களின் பொருளாதார நிலை மேம்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். பணியிடத்தில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. மிதுன ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும்.
செப்டம்பர் 24க்கு பிறகு கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் செய்யும் அனைத்து வேலைகளிலும் வெற்றி பெறுவீர்கள். சுக்கிரனின் சஞ்சாரம் அனைத்து பணிகளிலும் வெற்றியை தரும். நம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் புதிய உயரங்களை அடைய இந்த நேரத்தில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மிடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)