Venus Transit: டிசம்பரில் இரு முறை பெயர்ச்சியாகும் சுக்கிரனால் யோகம் பெறும் ராசிகள்
டிசம்பரில் சுக்கிரனின் சஞ்சாரம் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக் காற்றை வீசும். தனுசு ராசியில் சஞ்சரிப்பது, இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும். பணம் வருவதற்கான புதிய வழிகள் ஏற்படும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். இது மட்டுமின்றி, நீங்கள் வெளிநாட்டு பயணமும் செல்லலாம், இது எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும்.
சுக்கிரனின் சஞ்சாரம், கும்ப ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாகவும் பலன் தருவதாகவும் இருக்கும். கும்ப ராசிக்கு 11ம் வீட்டில் சுக்கிரனின் சஞ்சாரம் நடக்கப் போகிறது, இது சேமிப்புகளை அதிகரிக்கும். வருமானத்தில் அபரிமிதமான உயர்வு இருக்கும். அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும். பழைய முதலீடுகள்ல் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சில சுப காரியங்கள் நடைபெறும்.
டிசம்பரில் சுக்கிரனின் சஞ்சாரம் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சுக்கிரன் கிரகம் உங்கள் ராசியின் இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறது, அது செல்வம் மற்றும் வாக்கு ஸ்தானமாக கருதப்படுகிறது. திடீர் பண வரத்து கிடைக்க வாய்ப்பு உள்ளது. வருமான அதிகரிப்பு ஏற்படலாம். தடைபட்ட பணிகள் முடிவடையும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வரவுக்கும் செலவுக்கும் இடையில் வருவாய் அதிகமாக எஞ்சும்
ஜோதிட சாஸ்திரத்தின்படி, இந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் அதிர்ஷ்டமாக இருக்கும். குழந்தைகள், உயர்கல்வி, காதல் உறவின் ஸ்தானமாக கருதப்படும் சிம்ம ராசியின் ஐந்தாம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிக்கப் போகிறார். குழந்தைகள் தரப்பிலிருந்து சில நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. காதல் உறவுகளில் இனிமை காணப்படும். போட்டித் தேர்வுக்குத் தயாராபவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.