டைம் ட்ராவலரின் பகீர் கணிப்பு! மனித தோற்றத்தில் ஆபத்தான மீன்கள் பூமியில் தோன்றும்

Sat, 13 Nov 2021-8:26 am,

சமூக ஊடக தளமான டிக்டாக்கில் வெளியான ஒரு வீடியோவில் பூமியில் விண்கற்கள் பொழியும், அது பூமியைத் தாக்கும் என்று கணிக்கப்பட்டது. இதனுடன் ஏலியன்களும் பூமிக்கு வருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளதாக, டெய்லி ஸ்டாரில் வெளியான செய்திகள் கூறுகின்றன.

டிக்டாக் கணக்கான @aesthetictimewarper என்ற கணக்கில் வீடியோவைப் பகிர்ந்து கொண்டு வேற்றுகிரகவாசிகள் மற்றும் டைம் ட்ராவல் பற்றி அவர் எடுத்துக் கூறுவது இது முதல் முறையல்ல. இந்த நபர் மனிதகுலத்தைப் பாதுகாப்பதற்காக டைம் ட்ராவல் செய்து எதிர்கால உலகம் தொடர்பான கணிப்புகளை செய்வதாக முன்னதாகவும் கூறியுள்ளார்.

ஜூலை மாதம், நபர் 2021 மற்றும் 2022 இறுதிக்குள் ஐந்து முக்கியமான தேதிகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறியதுடன், டிசம்பரில் ஒரு மாற்று பிரபஞ்சத்தை உருவாக்கும் போர்டலை திறந்து, மூன்று இளைஞர்கள் டி ரெக்ஸ் டைனோசர் முட்டையைப் (T Rex Dinosaur Egg) பயன்படுத்துவார்கள் என்று டைம் டிராவலர் கணித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டில், அட்லாண்டிஸின் மிதிகல் சன்கன் நகரம் அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகும் என்றும், மனித-மீன்கள் வாழும் இடமாக இருக்கும் என்றும் டைம் ட்ராவலர் கணித்துள்ளார். ஒருவகையில், மனிதர்களைப் போன்ற தோற்றம் கொண்ட இவை மிக ஆபத்தான மீன்களாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

 

ஆகஸ்ட் மாதத்தில் நாசா ஒரு பிரதிபலிப்பு பூமியைக் கண்டுபிடிக்கும் என்றும் அக்டோபரில் சூரியனின் அபரிமிதமான ஆற்றலில் இருந்து எட்டு சூப்பர் பவர் தோன்றும் எனவும் அந்த டைம் ட்ராவலர் கணித்துள்ளார். தற்போது, ​​பயனர்கள் இந்தக் கணக்கின் வீடியோக்களை நம்பவில்லை, என்பதோடு, இவரது பதிவிற்கு கேலியாக கருத்துக்களை பதிவிட்டு வருமின்றனர். இதற்கு, பதிலளித்த @aesthetictimewarper என்ற டிக்டாக் பதிவர் அந்த ஐந்து தேதிகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று மீண்டும் கூறினார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link