Diabetes: நீரிழிவு நோயை கட்டுப்படுத்த சஞ்சீவினியாக செயல்படும் ‘இந்த’ பழமே போதும்!
சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு குறைபாட்டை குணமாக்கும் ஒரு சிறந்த பழம் நாவல் பழம். நாவல் பழத்தின் விதையில் ஜம்போலைன் என்ற குளூக்கோசைட் அதிக அளவில் உள்ளது. இதன் செயல்பாடு உடலுக்குள் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாடு தடுக்கப்படுகிறது. நாவல் பழத்தின் விதைகளை இடித்து எடுக்கப்பட்ட தூளை தினமும் ஒரு கிராம் வீதம் காலையிலும், மாலையிலும் தண்ணீருடன் கலந்து உட்கொண்டால், நீரிழிவு நோய் அதிசயத்தக்க வகையில் கட்டுப்படுத்தப்படும் என்கின்றனர் நிபுணர்கள்.
நாவல் பழத்தில் நார்ச்சத்து, புரதம், கால்சியம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம், மாங்கனீசு, இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் சி போன்ற முக்கியமான சத்துக்கள் காணப்படுவதாக இந்தியாவின் பிரபல உணவியல் நிபுணர் டாக்டர் ஆயுஷி யாதவ் தெரிவித்தார்.
நாவல் பழச்சாற்றை தினமும் மூன்று வேளை தவறாமல் உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவு 15 நாட்களில் பத்து சதவிகிதம் குறைத்துவிடலாம். மூன்று மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப்படுத்திவிடலாம் என்கின்றனர் வல்லுநர்கள்.
நாவல் பழத்தை சாலட், ஜூஸ் அல்லது சமைத்து உணவாக என பல வகைகளில் சாப்பிடலாம் என்றாலும், நாவல் பழத்தை அப்படியே உட்கொள்வதால், ஆரோக்கிய நலன்களை முழுமையாக பெறலாம். இதில் கலோரிகள் குறைவு மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதோடு, எடையையும் குறைக்கும். (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)