சி.எஸ்.கே வின் ஆட்டத்தை காண வெளிநாட்டிலிருந்து ஓடி வரும் விக்னேஷ் சிவன்..!
போடா போடி, நானும் ரௌடிதான் போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் விக்னேஷ் சிவன்.
கடந்த ஆண்டு நயன்தாராவை மனம் முடித்தார்.
விக்கி-நயனிற்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர்.
விக்னேஷ் சிவன் சமீபத்தில் நடைப்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டார்.
பாரிஸில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டவுடன் மான்டே கார்லோவிற்கு சென்றார்.
இன்று ஐ.பி.எல் போட்டியின் கடைசி லீக் ஆட்டம் நடைபெறுகிறது. இதில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன.
விக்கி பெரிய சென்னை ரசிகர். இதனால், கடைசி போட்டியை காண்பதற்காக தனது வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்புவதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
விக்னேஷ் சிவனின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.