மீண்டும் அடுத்தடுத்து வெளியாகப்போகும் விஜய் சேதுபதியின் படங்கள்!
)
விஜய் சேதுபதிக்கு கடந்த ஆண்டு சிறப்பாக அமைந்தது. அவரின் 50வது படமான மஹாராஜா மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் அவரது மார்க்கெட்டை மீண்டும் கொண்டு வந்தது.
)
அதனை தொடர்ந்து வெளியான விடுதலை 2 படமும் நல்ல வசூலை பெற்றது. மேலும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதுவும் அவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
)
அதனை தொடர்ந்து தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். கலைப்புலி எஸ் தாணுவின் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் 'டிரெயின்' என்ற படத்தில் ஏற்கனவே நடித்து முடித்துள்ளார்.
ஆறுமுக குமார் இயக்கத்தில் 'ஏஸ்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் நித்யா மேனம் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இந்நிலையில் இந்த மூன்று படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
கடந்த காலங்களில் விஜய் சேதுபதி நடித்த படங்கள் அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகி கேலி கிண்டலுக்கு உள்ளானது. அதே நிலை மீண்டும் உருவாகுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.