வாரிசு ஆடியோ ரிலீஸூக்கு வருவாரா உதயநிதி ஸ்டாலின்?
வாரிசு படத்தின் ஆடியோ ரிலீஸ் சென்னையில் நாளை பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.
இதில் விஜய், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்க உள்ளன. இதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வாரிசு படத்தின் சென்னை, கோயம்பத்தூர் உள்ளிட்ட ஒரு சில ஏரியாக்களின் வெளியீட்டு உரிமையை ரெட்ஜெயண்ட்ஸ் மூவீஸ் வாங்கியிருக்கிறது.
இதனால் உதயநிதி ஸ்டாலினுக்கும் வாரிசு ஆடியோ ரிலீஸில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த அழைப்பை ஏற்று விஜய்யுடன், வாரிசு மேடையில் உதயநிதி ஏறுவாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.