சச்சின் போல் தனி ஒருவனாக போராடும் கோலி; கானல் நீராக இருக்கும் உலக கோப்பை

Thu, 10 Nov 2022-7:34 pm,

2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை வென்ற அணியில் இருந்த விராட் கோலி, 20 ஓவர் உலக கோப்பையை இன்னும் ஒரு முறை கூட வெல்லவில்லை. 

அவரது தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையில் தோல்வியடைந்த பிறகு கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய அவர், ஒரு பிளேயராக அணியில் விளையாடிக் கொண்டிருக்கிறார்.

ரோகித் சர்மா தலைமையில் விளையாடினாலும் ஒரு வீரராக 20 ஓவர் உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருக்கிறது.

இதனால், ஒவ்வொரு உலக கோப்பையிலும் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலிக்கு, இந்த ஆண்டு உலக கோப்பையும் கானல் நீராக அமைந்துள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில், விராட் கோலியின் சோகமான ரியாக்ஷன் இணையத்தில் வைரலாகியுள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link