15 ராணிகள் கொண்ட ராஜாவின் முன், கன்னிப்பெண்கள் நடனம்…

Thu, 17 Dec 2020-3:58 pm,

இந்த நாட்டின் ஒரு விஷயம் வித்தியாசமாகவும், ஆச்சரியம் தருவதாகவும் இருக்கிறது. இந்நாட்டு மன்னர் மூன்றாம் மஸ்வதி மன்னருக்கு (Mswati 3) 15 ராணிகள் மற்றும் 30 குழந்தைகள் இருக்கிறார்களாம்! உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக எசுவாத்தினி (Eswatini) பட்டியலிடப்படுகிறது. இங்கே முடியாட்சி அதிகாரம் இன்னும் நடைமுறையில் உள்ளது. மூன்றாம் மஸ்வதி மன்னர் மிகவும் சக்தி வாய்ந்தவராக இருக்கிறார். இந்நாடடு மக்கள் பசி மற்றும் வறுமையுடன் போராடுகிறார்கள். 1.3 மில்லியன் மக்கள் வாழும்  இந்த நாட்டில், 63 சதவீதம் பேர் வறுமையில் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆனால் மூன்றாம் ராஜா மஸ்வாதி ஆடம்பரமாக வாழ்கிறார்.

நாட்டின் பெயர் 2018 இல் மாற்றப்பட்டது ஏன்?  ராஜா மஸ்வதி III, நாட்டின் சுதந்திரத்தின் 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் 2018 ஆம் ஆண்டில் நாட்டின் பெயரை ஸ்வாசிலாந்து (Swaziland) என்பதில் இருந்து 'Kingdom of Eswatini' என்று மாற்றினார். பிரிட்டனின் கட்டுப்பபாட்டில் இருந்து 1968 ஆம் ஆண்டில் மன்னர் மூன்றாம் மஸ்வாதியின் தந்தை சோபுஜா (Sobhuja) நாட்டை விடுவித்தார். 

மஸ்வாதி மன்னருக்கு 15 ராணிகள் மற்றும் 30 குழந்தைகள் இருக்கிறார். ராஜாவும் அவரது குடும்பத்தினரும் வ்வசதி வாய்ப்புகளுடன் ஆடம்பரமாக வாழ்கிறார்கள். ஆடம்பரம் என்பது வசதியில் மட்டுமல்ல, 15 ராணிகள் மற்றும் 30 குழந்தைகள் என்று மெகா குடும்பத்தை வைத்திருக்கிறார் இந்நாள் மன்னர். இவருடைய தந்தையும் அந்நாள் மன்னருமான சோபூஜாவுக்கு 125 ராணிகள் இருந்தார்கள் என்றால், இது கொஞ்சம் குறைச்சல் தான் என்று அரசர் வருந்தாமல் இருந்தால் சரி. மன்னரின் மொத்த சொத்துக்கள் சுமார் 200 மில்லியன் டாலர்கள். ராணிகளுக்காக 13 ஆடம்பரமான அரண்மனைகளை கட்டியுள்ளார் ராஜா. அரண்மனைகளின் அழகு அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் இருக்கிறதாம்.

 

தனது வித்தியாசமான பாரம்பரியத்திற்கும் பெயர் பெற்றது எசுவாத்தினி (Eswatini) ராஜ்ஜியம். இங்கே, 'உம்லாங்கா விழா' (Umhlanga Ceremony) என்ற திருவிழா (festival) ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் மிகுந்த ஆடம்பரமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் 10000 க்கும் மேற்பட்ட கன்னிப் பெண்கள் பங்கேற்று, ராஜா மற்றும் குடிமக்களின் முன்னால் நிர்வாணமாக நடனமாடுகிறார்கள். ராஜாவுக்கு பிடித்த பெண் புதிய ராணியாகி விடுவார்!

2015 ஆம் ஆண்டில், மூன்றாம் மஸ்வாதி மன்னர் (King Mswati 3)இந்தியாவுக்கு வந்தார். இந்தியாவில் நடைபெற்ற இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாட்டில் (India-Africa summit) கலந்து கொண்டார். அப்போது அவர் இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தையும் சந்தித்தார்.  மன்னரின் அரசுமுறைப் பயணத்தில் அவருடன் 15 மனைவிகள், குழந்தைகள் மற்றும் 100 ஊழியர்கள் இந்தியாவுக்கு வந்திருந்தனர். டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் (Five Star Hotel) அவருக்காக சுமார் 200 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டன.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link