தொப்பையை 30 நாட்களில் குறைக்க தினசரி இத மட்டும் பண்ணுங்க!
தொப்பை கொடுப்பால் பலரும் சிரமப்பட்டு வருகின்றனர், பிடித்த ஆடைகளை அணிய முடியாமல் சிரமப்படுகின்றனர். இதனை குறைக்க தினசரி உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகளை பின்பற்றினால் போதும்.
ஜிம்முக்கு போக தினசரி நேரம் இல்லை என்றால், தொப்பையை குறைக்க தினசரி சைக்கிள் ஓட்டுங்கள். இது உங்கள் தொப்பை சில நாட்களில் குறைக்க உதவும். தினசரி 5 கிலோ சைக்கிள் ஓட்டுவது நல்லது.
எலுமிச்சை - இஞ்சி
எலுமிச்சம்பழங்களின் தோலை தண்ணீரில் போட்டு, அதனுடன் மிளகு தூள் மற்றும் இஞ்சி சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். பின்னர் அதனை வடிகட்டி, அதில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால் உடல் எடை ஒரு மாதத்தில் குறையும்.
சீரகம் - இலவங்கப்பட்டை
தண்ணீரில் சீரகம் மற்றும் இலவங்கப்பட்டையை சேர்த்து கொதிக்க வைக்கவும். இதில் தேன் மற்றும் எலுமிச்சை சேர்த்து தினசரி குடித்து வந்தால் ஒரு மாதத்தில் உடலில் மாற்றங்கள் உண்டாகும்.
சியா விதைகள் - எலுமிச்சை
சியா விதைகளை தண்ணீரில் ஊற வைத்து, பிறகு வேண்டும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து, அதில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். இதனை வெறும் வயிற்றில் தினசரி குடித்து வந்தால் தொப்பையை குறைக்கலாம்.