கைகள், நகங்களில் இந்த அறிகுறிகள் இருக்கா? கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது, ஜாக்கிரதை
உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்தால், அதற்கான அறிகுறிகளை நமது உடல் அளிக்கின்றது. கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, சில அறிகுறிகள் உங்கள் கைகளில், குறிப்பாக நகங்களில் தோன்றும். கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது உங்கள் கைகள், நகங்களில் காணப்படும் அறிகுறிகள் என்ன? இவற்றை கண்டவுடன் ஏன் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் போது, உங்கள் நகங்களின் நிறம் மஞ்சளாக மாறும். இது உடலில் இரத்த ஓட்டம் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. இரத்த ஓட்டம் சரியாக இல்லையென்றால், நகங்களின் நிறம் மஞ்சளாக மாறும், நகங்களில் விரிசல்கள் உருவாக ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி உங்கள் நகங்களின் வளர்ச்சியும் நின்றுவிடும். இந்த அறிகுறிகள் தோன்றினால், கண்டிப்பாக கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்துகொள்வது நல்லதாகும்.
உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால், அது கைகளின் இரத்த நாளங்களை மூடக்கூடும். இதன் காரணமாக கைகளில் வலி தொடங்குகிறது. ஆகையால், உங்கள் கைகளில் வலி இருந்தால், அதைப் புறக்கணிக்காதீர்கள். உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
உடலின் சில பகுதிகளில் இரத்த ஓட்டம் தடைபடுவதால் கைகளில் கூச்ச உணர்வு ஏற்படுகிறது. அதிக கொலஸ்ட்ரால் மற்றும் உடல் பருமன் காரணமாக, சரியான இரத்த ஓட்டம் அவ்வப்போது தடைபடுகிறது. இது கைகளில் கூச்சத்தை ஏற்படுத்தும். கைகளில் கூச்சம் ஏற்படுவது அதிக கொலஸ்ட்ராலுக்கான மிக முக்கியமான அறிகுறியாக பார்க்கப்படுகின்றது.
நமது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, பல வித அறிகுறிகளை நமது உடல் அளிக்கின்றது. கொலஸ்ட்ரால் பிரச்சனை அதிகரித்து வரும் நிலையில், இதற்கான அறிகுறிகள் பற்றிய புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும். மேலும், இந்த அறிகுறிகள் தென்பட்டால், அவற்றை புறக்கணிக்காமல்,. உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்துகொள்வதும் அவசியமாகும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)