உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்தால் இந்த அறிகுறிகள் தென்படும்: ஜாக்கிரதை!!
நமது வாழ்வில் சில ஆரோக்கியமான மாற்றங்களை செய்வது மிக முக்கியமாகும். பொதுவாக அதிக கொலஸ்ட்ராலின் அறிகுறிகள் எளிதில் கண்டறியப்படுவதில்லை. இதற்காக லிப்பிட் ப்ரொஃபைல் சோதனை செய்யப்படுகிறது. இருப்பினும், பல சமயங்களில் நம் உடலும் இதைப் பற்றிய அறிகுறிகளை நமக்கு அளிக்கிறது.
பொதுவாக, நமது ரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் சேரும் போது, அடைப்பு காரணமாக, உடலின் பல பாகங்களில் ரத்த ஓட்டம் சரியாகச் செல்ல முடியாமல், ரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால், உடல் வலி மற்றும் தசைப்பிடிப்பு அதிகரிக்கிறது. மேலும், தசைகளில் வலியையும் எதிர்கொள்ள வேண்டி வருகிறது.
இரத்தக் குழாய்களில் கெட்ட கொலஸ்ட்ரால் சேர்வதால் நெஞ்சு வலி ஏற்படுவது இன்றைய காலத்தில் பொதுவானதாகி விட்டது. பெரும்பாலும் துவக்கத்தில் ஒரு வித அமைதியின்மை உணரப்படுகின்றது. பின்னர் நெஞ்சு வலி அதிகரிக்கத் தொடங்குகிறது.
உங்கள் வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றி கொழுப்பு சேர ஆரம்பித்தால், உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்துள்ளது என்பதை புரிந்துகொள்ளுங்கள். மெதுவான வளர்சிதை மாற்றத்தால் எடை அதிகரிக்கிறது.
கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், நமது தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு, அதன்பிறகு ரத்தம் இதயத்தைச் சென்றடைய அதிக முயற்சி எடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது ரத்த அழுத்தம் எனப்படும். ரத்த அழுத்தம் காரணமாக மாரடைப்பும் ஏற்படலாம்.