மன்மோகன் சிங் வாழ்க்கை வரலாறு படம்! ‘இந்த’ தளத்தில் இலவசமாக பார்க்கலாம்..
இந்தியாவின் தலைசிறந்த தலைவர்களுள் ஒருவராக விளங்கியவர் மன்மோகன் சிங். 1932ஆம் ஆண்டு பிறந்த இவர், (பாகிஸ்தானில் இருக்கும்) பஞ்சாப், காஹ் கிராமத்தில் பிறந்தவர். வெளிநாட்டில் பொருளாதாரத்தில் பட்டப்படிப்பு பெற்றவர்.
இந்தியாவின் முதல் சீக்கிய மத பிரதமராக இருந்த மன்மோகன் சிங், 13வது பிரதமராக விளங்கினார். 2004 முதல் 2014 வரை பதவியில் இருந்திருக்கிறார்.
மன்மோகன் சிங், யாரிடமும் அதிர்ந்து பேசாத குணாதிசயம் படைத்தவர். இவர் பெரிதும் ஊடகத்திடம் பேசாதது, அவற்றுக்கு பயந்துதான்.
மன்மோகன் சிங்கின் வாழ்க்கையை வைத்து 2019ஆம் ஆண்டு ஒரு படம் வெளியானது. அந்த படத்தின் பெயர் தி ஆக்ஸிடெண்டல் ப்ரைம் மினிஸ்டர்.
இந்த படத்தில் அனுபம் கெர், மன்மோகன் சிங் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் இந்தியில் உருவாக்கப்பட்டிருந்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.
இதனை ஜீ 5 தளத்தில் பார்க்கலாம். ஆனால், அதற்கு நீங்கள் அந்த தளத்தில் சப்ஸ்க்ரைப் செய்திருக்க வேண்டும். ஆனால் வேறு ஒரு தளத்தில் இந்த படம் இலவசமாகவே உள்ளது.
யூடியூப் தளத்தில் The Accidental Prime Minister என்று டைப் செய்து search செய்தால், இந்த 1 மணி நேர, 38 நிமிட படத்தை இலவசமாக பார்க்கலாம்.