உலகின் இந்த நாடுகளில் ஹிஜாப் அணிவதற்கு தடை
நெதர்லாந்தில், பள்ளிகள், மருத்துவமனைகள், பொது போக்குவரத்து மற்றும் அரசு கட்டிடங்களில் ஹிஜாப் அல்லது முகத்தை மூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.
பிரான்ஸ் முதன்முதலில் பள்ளிகளில் ஹிஜாபை 2004 இல் தடை செய்தது. இதைத் தொடர்ந்து, 2011-ம் ஆண்டு பிரான்ஸ் அரசு பொது இடங்களில் முகத்தை மூடுவதற்கு தடை விதித்தது. ஹிஜாப் அணிபவர்களுக்கு இங்கு வரவேற்பு இல்லை என்று அப்போதைய பிரான்ஸ் அதிபர் கூறியிருந்தார்.
டென்மார்க்கில் ஹிஜாப் அணிவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. ஹிஜாப் அணிவது அல்லது முகத்தை மறைப்பது தொடர்பாக கடுமையான சட்டம் அங்கு உள்ளது. பிடிபட்டால், 12 ஆயிரம் ரூபாய் முதல், 85 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் கட்ட வேண்டி வரும்.
பயங்கரவாத நடவடிக்கைகளைக் கண்ட பல்கேரிய அரசு, ஹிஜாப் அணிவது அல்லது முகத்தை மறைப்பது நாட்டில் சட்டவிரோதமானது என்று முடிவு செய்திருந்தது. பல்கேரியாவில், முகத்தை மூடுவது தொடர்பாக அரசாங்கம் கடுமையான சட்டங்களை அமல்படுத்தியுள்ளது.
பெல்ஜியத்தில் ஹிஜாப் அணிவதற்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன. இங்கு பள்ளிகள், மருத்துவமனைகள், பொது போக்குவரத்து மற்றும் அரசு கட்டிடங்களில் ஹிஜாப் அல்லது முகத்தை மூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.