வார பலன் (Jan 30- Feb 5): சில ராசிகளுக்கு சங்கடம்... சில ராசிகளுக்கு சந்தோஷம்!
மேஷ ராசிக்காரர்கள், ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். வேலைகளை குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும், தாமதத்தால் பிரச்சனைகள் ஏற்படும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். எதுவும் எளிதில் கிடைக்கப் போவதில்லை. எதற்கெடுத்தாலும் எரிச்சல் அடைந்து, கோபத்தையெல்லாம் குடும்ப உறுப்பினர்கள் மீது காட்டக்கூடாது, எப்படியும் கோபப்படுவது சரியல்ல. அது மன உடல் நலத்தை பாதிக்கும்.
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன அழுத்தத்தை கொடுப்பது மட்டுமின்றி, பணத்தட்டுப்பாடும், அதிக செலவுகளும் மனதை அலைக்கழிக்கும். குடும்பத்தில் நடக்கும் சிறு தவறுகளுக்கும் கோபப்படுவது சரியல்ல, மன்னிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மன அழுத்தத்திலிருந்து விடுபடுவீர்கள். மூட்டுவலி நோயாளிகள் இந்த வாரம் வலியால் பாதிக்கப்படலாம். இளைஞர்கள் இந்த வாரத்தின் முதல் மூன்று நாட்களுக்கு அந்நியர்களுடன் பழகும் போது எச்ச்சரிக்கை தேவை.
மிதுன ராசிகள் வேலை விஷயத்தில் சாதமான வாரமாக இருக்கும். பொறியியல் துறையுடன் தொடர்புடைய இளைஞர்கள் வாரத்தில் சிறந்த வெற்றியைப் பெறலாம். தொடர்ந்து கடினமாக உழைக்கவும். குடும்பத்தில் கசப்பான உறவுகளை ஏற்படுத்துவது சரியல்ல, உறவை மேம்படுத்த முயற்சிகள் எடுக்க வேண்டும். உடல்நலம் விஷயத்திலும், மருந்துகள் விஷயங்களிலும் அலட்சியம் இருக்கக்கூடாது.
கடக ராசிக்காரர்கள் இந்த வாரம் வேலையில் எந்த விஷயத்திலும் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் சிக்கலைச் சந்திக்க வேண்டியிருக்கும். இந்த வாரம் இளைஞர்கள் ஆன்மீக புத்தகங்களை படிப்பதோடு, ஏதாவது ஒரு ஆன்மீக ஸ்தலத்திற்கும் செல்லலாம். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள். மன அமைதி மற்றும் ஆன்மிக நன்மை உண்டாகும். தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள், கவனமாக இருக்க வேண்டும்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உற்சாகம் நிறைந்ததாக இருக்கும். தங்கள் பணியிடத்தின் முக்கியமான கூட்டங்களில் பங்கேற்கவும், முன்னேற்பாடுகளை செய்யவும் வாய்ப்பு கிடைக்கும். இளைஞர்களின் சோம்பேறித்தனத்தை முன்னேற்றத்தின் எதிரியாகக் கருதி, அதிலிருந்து என்றென்றும் விலகிச் செயல்படுங்கள். இந்த வாரம் கஉங்கள் ஆரோக்கியத்தில் சிறிது பாதிப்பு இருக்கலாம். ஆனால், அதற்காக கவலை கொள்ளத் தேவையில்லை.
கன்னி ராசிக்காரர்கள் வீட்டுப் பிரச்சனைகளில் உண்மை தெரியாமல் ஒருதலைப்பட்சமான கருத்தை உருவாக்காதீர்கள், இல்லையெனில் தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளலாம். உடல்நலம் சீராக இருக்க, மருந்துகளை சீராக எடுத்துக் கொள்வதுடன், மனக் கவலைகளிலிருந்தும் விலகி இருக்க வேண்டும். அலுவலகப் பணிகளில் எந்த வித தவறும், அலட்சியமும் செய்யக் கூடாது.
துலா ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முதுகுவலி மற்றும் நரம்புகளில் பதற்றம் போன்ற பிரச்சனைகள் இருக்கலாம், இந்த வாரம் கொஞ்சம் ஓய்வு எடுக்க வேண்டும். வலி அதிகமாக இருந்தால் மருத்துவரை பார்க்க வேண்டும். வேலைச்சுமை அதிகமாக இருக்கும். அதனால் திட்டமிட்டு பணி செய்யவும். இளைஞர்கள் தாகாத செயல்களை செய்து சிக்காமல் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு வாரம் முழுவதும் பொருளாதார ஏற்ற இறக்கங்கள் இருக்கும், ஆனாலும் கவலைப்பட தேவையில்லை. இளைஞர்கள் தங்கள் நண்பர்களுடன் இரண்டு முதல் நான்கு நாட்கள் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. சூழலை மாற்றுவது மனதை மகிழ்ச்சிப்படுத்தும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வரும் வாரம் சாதாரணமாகவே இருக்கும்.
தனுசு ராசிக்காரர்கள் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுடன் சிறிது நேரம் செலவிட தயாராக இருங்கள். பெண்கள் தங்கள் ஆரோக்கியத்திற்கு கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஹீமோகுளோபின் இல்லாததால் பலவீனம் உணரப்படலாம். பணியிடத்தில் வேலையில் மன அழுத்தம் ஏற்படாமல், தங்கள் வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. பணத்தை கவனமாக கையாளவும். நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.
மகர ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் லாபமும் நஷ்டமும் தொடரும். மனதில் குழப்பம் இருக்கலாம் மற்றும் மன அழுத்தம் உங்கள் கவனத்தை வேலையில் இருந்து திசை திருப்பலாம். இந்த வாரம் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சுற்றுலா செல்ல வாய்ப்பு கிடைக்கும். வாய் அல்லது பற்களில் சில வகையான பிரச்சனைகள் இருக்கலாம். எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
கும்ப ராசிக்காரர்கள் இந்த வாரம் இந்த வாரம் உங்களுக்கு சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் வரலாம்.ஆரோக்கியத்தில் பெரிய பிரச்சனை வர வாய்ப்பில்லை என்றாலும் கவனமாக இருக்கவும். குழந்தைகள் விஷயத்தில் கவனம் செலுத்தவும். அலுவலகத்தில் தங்கள் வேலையை முடிப்பீர்கள். தொழிலதிபர்கள் தங்களின் தற்போதைய வருமானத்தில் திருப்தி அடைவதற்குப் பதிலாக சில புதிய வழிகளைத் தேட வேண்டும்.
மீன ராசிக்காரர்கள் இந்த வாரம் உங்களுக்கு உடல்நலம் சம்பந்தமாக எந்தவிதமான தொற்று நோய்களும் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தங்கள் வேலையில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் முதலாளி உங்கள் வேலையை உன்னிப்பாகக் கண்காணிக்கிறார். கூட்டுக் குடும்பத்தில் வசிப்பவர்கள் ஒத்துழைக்கும் மனப்பான்மையை மேம்படுத்த உழைக்க வேண்டும்.