உடல் கொழுப்பு கரைய... காலை உணவில் சாப்பிட வேண்டியதும்... சாப்பிடக் கூடாததும்
Weight Loss Diet: காலை உணவு மிக முக்கியமான உணவாகக் கருதப்படுகிறது, ஆரோக்கியமான காலை உணவை சாப்பிடுவது எடை இழப்புக்கும் முக்கியமானது. காலை உணவு உங்கள் வளர்சிதை மாற்றத்தை தூண்டுவதாகவும், நாள் முழுவதும் ஆற்றலை கொடுப்பதாகவும் இருக்க வேண்டும். உடலில் உள்ள கொழுப்பு கரைய வளர்சிதை மாற்றம் சிறப்பாக இருக்க வேண்டும்.
முட்டை: புரதத்தின் சிறந்த மூலமாக இருக்கும் முட்டை, வயிறு நிறைந்த உணர்வைக் கொடுத்து நாள் பசியை கட்டுப்படுத்தும். உடல் எடைய குறைய புரோட்டீன் சத்து மிக அவசியம். மூளை சிறப்பாக செயல்பட உதவும் கோலின் என்ற சத்தும் முட்டையில் நிறைந்துள்ளது.
தயிர்: தயிரில் கால்சியம் சத்துடன் அதிக புரதமும் குறைவான கலோரியும் உள்ளது. புரோபயாடிக்குகளின் சிறந்த ஆதாரமாக இருக்கும், தயிர் செரிமானத்தை மேம்படுத்தி, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, குடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைக்கிறது.
சிறுதானியங்கள்: சிறுதானியங்களில் தயாரிக்கப்பட்ட உணவுகள் குளூட்டன் அல்லாத ஆரோக்கிய உணவுகள். ராகி இட்லி, ராகி தோசை, தினை, சோளம் போன்றவை கொண்டு தயாரிக்கபப்ட்ட உணவுகள் ஊட்டச்சத்துக்களின் களஞ்சியங்கள். இதில் அதிக நார்ச்சத்து உள்ள தால், நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தரும்.
உலர் பழங்கள் மற்றும் விதைகள்: உலர் பழங்கள் மற்றும் விதைகளில் புரதம், நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகியவை நிறைந்துள்ளன. அவை உங்களை வயிறு நிறைந்த உணர்வைத் தருவதோடு, ஆற்றலும் அபரிமிதமாக இருக்கும்
ரெடு டு ஈட் வகை தானியங்கள்: பால் சேர்த்து சாப்பிடும் வகையில் இருக்கும் ரெடு டு ஈட் வகை தானியங்களில் சர்க்கரை அதிகமாகவும், புரதம் மற்றும் நார்ச்சத்து குறைவாகவும் இருப்பதால், சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே உங்களுக்கு பசி ஏற்படும். இதனால் உங்கள் கலோரி உட்கொள்ளல் அதிகரித்து உடல் பருமன் ஏற்படும்.
மைதா ரொட்டி: மைதாவில் தயாரிக்கப்பட்ட வெள்ளை ரொட்டியில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறைவாகவே உள்ளது. இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கலாம். மேலும், இதை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே உங்களுக்கு பசியை ஏற்படுத்தும். மேலும் பிரெட் சாண்ட்விச்களில் அதிக கலோரிகள், நிறைவுற்ற கொழுப்பு மற்றும் சோடியம் உள்ளது. எடை இழப்பு உணவுக்கு அவை ஆரோக்கியமான பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.