இஞ்சி இடுப்பழகி ஆகணுமா... ஒரே வாரத்தில் 2 கிலோ எடைய குறைய ‘சில’ டிப்ஸ்!
உடல் பருமன் குறைய வளர்ச்சியை மாற்றம் என்ன மெட்டபாலசத்தை அதிகரிப்பதன் மூலம் கூடுதல் கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் பருமன் குறையும். இதற்கு சீரகம், ஓமம், லவங்கப்பட்டை ஆகியவை சேர்த்த நீரை வெறும் வயிற்றில் அருந்துவது பலனளிக்கும்.
பழங்கள் மற்றும் காய்கறிகளில் நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள் தாதுக்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இதை உடல் எடை குறைக்க மிகவும் உதவும். அதிலும் பருவ கால பழங்கள் மற்றும் காய்கறிகள் மிகவும் சிறந்தது.
உடல் எடையை குறைக்க புரதச்சத்து மிகவும் முக்கியம். அந்த வகையில் முட்டையை கொள்ளலாம். முட்டை பிடிக்காதவர்கள், சோயா உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
முழு தானிய உணவுகள், குறைவான கலோரிகள் மற்றும் அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்டவை. அரிசியின் அளவை குறைத்து தானியங்களை அதிகம் எடுத்துக் கொள்வதால் உடல் பருமன் வெகுவாக குறையும்.
ஆரோக்கியமான கொழுப்பு அமிலம் நிறைந்த உலர் பழங்கள், உடல் எடையை குறைக்க மிகச் சிறந்தவை. பாதாம், முந்திரி போன்றவற்றை, ஊற வைத்து சாப்பிடுவதால் அதிக பலன் பெறலாம்.
முளைகட்டிய தானியங்கள், உடல் எடை குறைப்பதற்கான சிறந்த உணவு, முளைகட்டிய பயறுகளை பச்சையாக சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுதல் மிகவும் நல்லது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.