சாப்பாடு மட்டும் இல்லை! இந்த காரணங்களாலும் உடல் எடை அதிகரிக்கும்!
சரியான உணவு இல்லாத காரணத்தால் பெரும்பாலான மக்களுக்கு உடல் எடை அதிகரிக்கிறது. எனவே உடல் எடையை குறைக்க பலரும் செய்யும் முதல் முயற்சி உணவை குறைப்பது தான்.
மேலும் உடல் எடை அதிகரிக்க சரியான தூக்கம் இல்லாமை, ஆல்கஹால், இரவு தாமதமாக சாப்பிடுதல் போன்ற காரணங்களும் உள்ளன. இதனால் முகம் மற்றும் வயிறு பெரிதாகிறது.
உடல் எடையை சரியான முறையில் குறைக்க முறையான உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகளை பின்பற்றுவது அவசியமான ஒன்று. சத்தான உணவுகளை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும்.
கார்டிசோல் அல்லது மன அழுத்த ஹார்மோன் அதிகரிக்கும் போது உடல் எடை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆரோக்கியத்திலும் தீங்கு விளைவிக்கிறது.
ஒருவர் மன அழுத்தத்தில் இருக்கும் போதெல்லாம், கார்டிசோல் சுரப்பி உடலில் அதிகரிக்கிறது. எனவே நீண்ட நாள் ஒருவர் மன அழுத்தத்தில் இருக்கும் போது உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
உடல் எடை அதிகரிப்பு மட்டும் இன்றி, உடலில் கார்டிசோல் அதிகரித்தால் இருதய பிரச்சினை, இன்சுலின் எதிர்ப்பு, வளர்ச்சிதை மாற்றம் போன்ற அபாயத்தை அதிகரிக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே தினசரி ஆரோக்கியமான உணவு, நல்ல தூக்கம், காலை மற்றும் மாலை உடற்பயிற்சி, மது குடிக்காமல் இருப்பது மற்றும் மன அழுத்தத்தை குறைப்பது போன்றவற்றை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.