சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் உடலில் என்ன மாற்றங்கள் நடக்கும்?
உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து, இரத்தத்தில் சர்க்கரை அளவை பாதிக்கிறது. மேலும் ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிக்கும். ஒரு மாதம் சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் உடலில் என்ன மாற்றம் நடக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
உணவில் சர்க்கரையை சேர்த்து கொள்ளவில்லை என்றால் உடல் எடை குறைய வழிவகுக்கும். சர்க்கரை சேர்க்கும் போது கலோரிகள் அதிகரித்து பசியை தூண்டுகிறது. எனவே சர்க்கரையை நீக்கும் போது கலோரி குறைந்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.
அதிகப்படியான சர்க்கரை இரத்த குளுக்கோஸ் அளவுகளில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இதனால் உடலின் ஆற்றல் மட்டங்கள் பாதிக்கப்படும். சர்க்கரையை குறைக்கும் போது நீடித்த ஆற்றலுக்கு உதவுகிறது.
அதிகப்படியான சர்க்கரை உடலில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் முகப்பரு மற்றும் தோல் அலர்ஜி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. சர்க்கரையை தவிர்க்கும் போது தெளிவான சருமத்தை பெற உதவுகிறது.
சர்க்கரை உட்கொள்ளலை குறைக்கும்போது உடலில் கொலஸ்ட்ரால் அளவும் குறைகிறது. மேலும் இதயம் தொடர்பான நோய்களும் குறைந்து ஆரோக்கியத்தில் கூடுதல் நன்மையை தருகிறது.
உடலில் சர்க்கரை அதிகளவு சேர்ந்தால் மூளை செயல்பாட்டை பாதிக்கிறது. சர்க்கரையை குறைத்தால் இரத்த குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்த முடியும். இதன் மூலம் ஒட்டுமொத்த அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தும்.