Health Sector: சுகாதாரத்துறைக்கு பட்ஜெட்டில் இவ்வளவு சலுகைகளா? குஷியில் ஆஷா பணியாளர்கள்!
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுத்தேர்தலுக்கு முன்பு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் அறிவிட்ட அறிவிப்புகளில் முக்கியமானவைகளில் ஒன்று சுகாதாரத் துறையில் பணிபுரியும் பணியாளர்களுக்கான பரிசு.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, ஆயுஷ்மான் பாரத் சுகாதார திட்டத்தின் பலன்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நீட்டித்தார். அங்கன்வாடி பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கும் இனிமேல் இந்த சுகாதாரத் திட்டத்தின் பலன்கள் வழங்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார்
சுகாதாரத்துறையில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வருவதற்காக நாட்டில் அதிக மருத்துவக் கல்லூரிகளைக் கட்டவிருப்பதாக நாட்டில் அதிக மருத்துவக் கல்லூரிகள் கட்டப்படும் என்று தெரிவித்ஹார்.
9 வயது முதல் 14 வயது வரை உள்ள சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசியை இலவசமாக வழங்கப்படும் என்றும், இதனால் எதிர்காலத்தில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஏற்படாமல் பாதுகாக்கலாம் என்று நிதியமைச்சர் சீதாராமன் அறிவித்தார்
ஊட்டச்சத்து 2.0 துரிதப்படுத்துவதாக நிதியமைச்சர் அறிவித்தார் அனைத்து ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களும் சேர்க்கப்படுவார்கள்.
ஆராய்ச்சி மாணவர்களுக்காக, அரசு, ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
தாய், சேய் நலம் குறித்து, பல்வேறு ஒருங்கிணைந்த திட்டங்கள் கொண்டு வரப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்