இடி, மின்னல் அடிக்கும்போது... செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்னென்ன?
இடி மற்றும் மின்னல் (Lightning And Thunderstorm) அடிக்கும்போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து சென்னை பெருநகர மாநகராட்சி சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. அதுவும் நீங்கள் வீட்டில் இல்லாமல், வெளியில் இருந்தால் இந்த விஷயங்களை பின்பற்றுங்கள்.
இடி மற்றும் மின்னல் அடித்தால் உடனடியாக பாதுகாப்பான இடம் நோக்கி செல்லுங்கள். உலோகக் கட்டமைப்புகள் மற்றும் உலோகத் தாளுடன் கூடிய கட்டுமானங்களைத் தவிர்க்கவும்.
அந்த இடங்களை தாழ்வான பகுதியில் தேர்ந்தெடுத்து, அங்கு பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள். அதாவது, இந்த இடத்தில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பில்லை.
பாதுகாப்பான இடத்தில் கால்களை ஒன்றாக சேர்த்து நன்கு குனிந்து தலையை கீழே வைத்து அமரவும். இதனால் இடி, மின்னல் தாக்கும் வாய்ப்பு குறைவு
உங்கள் கழுத்தின் பின்பகுதியில் மயிர்கூச்சரியும் உணர்வு எழுந்தால், அது மின்னல் விரைவில் வருவதைக் குறிக்கும்.
தரையில் படுக்கவே படுக்காதீர்கள். அது பெரிய இலக்காக தெரியும். இடி, மின்னல் பெரிய இலக்கையே தாக்கும். தொலைபேசி, மின்சாரம் உள்ளிட்ட வயர்களிடம் இருந்து விலகி இருங்கள். அதேபோல், உலோக வேலிகள், மரங்கள் மற்றும் மலை உச்சிகள் ஆகிய இடங்களில் இருந்து விலகி இருங்கள்.
மரங்களின் கீழ் தஞ்சம் அடையக் கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும். மரங்கள் மின்சாரத்தை கடத்தும்.
ரப்பர் ஷூக்கள் மற்றும் கார் டயர்கள் மின்னலில் இருந்து பாதுகாப்பு அளிக்காது. அவற்றை நம்ப வேண்டாம்.