நிஜவாழ்க்கையில் குரூப்பிற்கு இறுதியில் என்ன ஆனது?

Sun, 14 Nov 2021-5:40 pm,

கேரளாவில் அதிகளவில் பேசப்பட்ட குற்றவாளியும், இந்தியளவில் போலீஸால் தீவிரமாக தேடப்பட்டு வந்த ஒரு முக்கிய குற்றவாளி தான் “குரூப்”.கேரளாவிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த இவர் சிறுவயதிலிருந்தே மிகத் துடிப்பானவர்

 

படிப்பை முடித்த பிறகு இவருக்கு ஏர் ஃபோர்ஸில் வேலை கிடைத்துள்ளது. நாளடைவில் இந்த வேலை இவருக்கு சலிப்பை ஏற்படுத்தி விட இந்த வேலையை கைவிட்டுள்ளார். இதனையடுத்து இவரை காணவில்லை என்று ஏர் ஃபோர்ஸில் இருந்து புகார் கொடுக்கப்பட்டது. பின்னர் குரூப் தான் இறந்துவிட்டதாக தானே பொய்யாக ஒரு சான்றிதழை தயார் செய்து நிர்வாகத்திற்கு அனுப்பிவிட்டார்

 

அதனைத் தொடர்ந்து மும்பை சென்று சிறிது காலம் வேலை பார்த்தவர் அரபு நாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டார். அந்த நிறுவனத்தில் சிறிது தொய்வு ஏற்பட அங்கிருந்து வந்தவர் தன்னுடன் மூன்று கூட்டாளிகளை இணைத்து கொண்டார்.

 

பின்னர் இவர் படித்த ஒரு நாவலில் இருந்த கதையை மனதில் வைத்து ஒரு திட்டம் தீட்டினார். அதாவது தன்மீது 8 லட்சம் இன்ஷூரன்ஸ் செய்திருப்பதாகவும், தான் இறந்துவிட்டதாக காண்பித்தால் தான் அந்தப் பணத்தை பெற முடியும்,அதனால் தன்னைப்போல் இருக்கும் ஒருவரை கொன்று அந்த பிணத்தை தன்னுடைய பிணம் தான் என காண்பித்து அப்பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று திட்டம் தீட்டினார்

 

அந்த திட்டத்தை செயல்படுத்த தன்னை போல் இருக்கும் ஒருவரை கொன்று, உடலை எரித்து அது 'குரூப்' உடல்தான் என்று நம்ப வைத்தார்.இருப்பினும் பிரேத பரிசோதனையில் அது அவரது உடல் இல்லை என்பது உறுதியானது. இதனையடுத்து போலீசார் பல இடங்களில் குரூப்பை தேடியும் குரூப் இன்றளவிலும் போலீசார் கையில் சிக்கவில்லை. குரூப் என்பவரது வழக்கு கேரளாவில் இன்னும் மர்மமானதாகவே பார்க்கப்படுகிறது

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link