இரவில் சரியாக தூங்கவில்லை என்றால் என்னென்ன பிரச்சனை வரும் தெரியுமா?
எடை அதிகரிப்பு:
இரவில் அதிக நேரம் விழித்துக்கொண்டு இருப்பதால் பசியுணர்வு அதிகமாகலாம். இதனால், எடை கூடி போகலாம்.
சரும ஆரோக்கியம்:
சரியாக தூங்காமல் இருப்பது, சரும ஆரோக்கியத்தை கெடுக்கலாம். கண்களுக்கு கீழ் கருவளையம் உள்ளிட்ட சில பாதிப்புகளை அவை கொண்டு வரலாம்.
மனநிலை மாற்றங்கள்:
சரியாக தூங்காதது பதற்றம், மன அழுத்தம் போன்ற மனநிலை மாற்ற பிரச்சனைகளை உருவாக்க இயலும்.
தனிமை:
இரவில் வெகு நேரம் விழித்துக்கொண்டிருப்பதால், உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் அவர்களுக்கு தேவைப்படும் நேரங்களில் உங்களால் இருக்க முடியாத நிலை ஏற்படலாம். இதனால் தனிமை உணர்வு மேலோங்கலாம்.
நோயெதிர்ப்பு சக்தி:
தூக்கம் சரியாக இல்லாததால், உங்களின் நோயெதிர்ப்பு சக்தி குறையவும் வாய்ப்புள்ளதாம்.
சோர்வு:
இரவில் தாமதமாக உறங்குவதால், உங்களின் சர்காடியன் ரிதம் சரியாக இயங்காமல் போகலாம். இதனால் எப்போதும் சோர்வான மனநிலையே இருக்கும்.
கவனச்சிதறல்:
தூக்கமின்மை பிரச்சனை, கவனச்சிதறலை ஏற்படுத்தலாம். முடிவெடுத்தல் திறன், நினைவாற்றல் ஆகியவை மங்கி போகலாம்.
உடல் நிலையில் முன்னேற்றமின்மை:
தூக்கமின்மை, நாள்பட்ட நோய் பாதிப்பிற்கு வழிவகுக்கலாம். இருதய நோய் தொடர்பான பிரச்சனைகள் உள்பட சில நோய் பாதிப்புகள் இதில் அடங்கும்.