தினமும் இரவு 10 மணிக்கே தூங்கினால் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும்?
தினசரி வாழ்க்கை முறையில் ஒரு மனிதனுக்கு தூக்கம் மிக முக்கியமானது. வேலை, குடும்பம் போன்ற பல்வேறு காரணங்களால் தூங்கும் நேரம் மாறுபடுகிறது.
இரவு சீக்கிரம் தூங்குவதால் இதய ஆரோக்கியம், மன ஆரோக்கியம் ஆகியவை மேம்படும். அதே சமயத்தில் தூக்கமின்மை காரணமாக மனசோர்வு, இதய நோய் போன்ற பல்வேறு உடல் நலப் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.
சமீபத்திய ஆய்வில் இரவு 10 மணி முதல் 11 மணிக்குள் தூங்க செல்வதன் மூலம் இதயம் மற்றும் இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தை குறைக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
தினசரி சீக்கிரம் தூங்கும் பழக்கத்தை பின்பற்றினால் அதிகாலை எழும்போது சுறுசுறுப்பாக இருக்க முடியும். அதே சமயம் உடலில் உள்ள ஹார்மோன்களும் சமச்சீராக இருக்கும்.
இரவு சீக்கிரம் தூங்கும் போது உடலுக்கு போதுமான ஓய்வு கிடைக்கிறது. இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்த முடியும்.
குழந்தைகள் இரவில் சீக்கிரம் தூங்கும் போது மறுநாள் பள்ளியில் சிறப்பாக செயல்பட முடியும். மேலும் நாள் முழுவதும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்.